Vilangu Others

ரோஹித்'த அவ்ளோ சாதாரணமா நெனச்சுட்டடீங்களா பொல்லார்ட்?.. கேப்டனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'கோலி'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டி 20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

ரோஹித்'த அவ்ளோ சாதாரணமா நெனச்சுட்டடீங்களா பொல்லார்ட்?.. கேப்டனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'கோலி'

பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில்.. விராட் கோலி பேனர்.. "அதுல போட்டிருந்த அந்த ஒரு லைன் தான் ஹைலைட்டே"

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை, இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது.

தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், இரண்டையும் வெற்றி கண்ட இந்திய அணி, அதனையும் கைப்பற்றியுள்ளது.

டி 20 தொடர்

நேற்று நடைபெற்ற இரண்டாம் டி 20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், பூரன் மற்றும் போவல் ஆகியோர் அதிரடியாக ஆடிய போதும், கடைசி கட்டத்தில் இந்திய அணியினிரின் சிறப்பான பந்து வீச்சினால், 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்திருந்தது.

virat kohli epic response for pollard about rohit sharma gone viral

இணையத்தில் வைரல்

தொடரை வென்று அசத்தியுள்ள இந்திய அணிக்கு, ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, போட்டிக்கு மத்தியில், ரோஹித் குறித்து கோலி சொன்ன விஷயம், மைக் ஆடியோவில் பதிவாகி, அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் சமீபத்திய கிரிக்கெட் தொடர்களில், மைக் ஆடியோவில், இந்திய அணியினர் தெரிவிக்கும் வேடிக்கையான மற்றும் கோபத்தில் பேசும் விஷயங்கள், அதிகம் வெளியாகி, இணையத்தில் வைரலடிக்கும்.

பொல்லார்ட் பிளான்

அந்த வகையில், இரண்டாவது டி 20 போட்டியிலும், ஒரு அசத்தல் சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்திய அணி வீரர்கள் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 8 ஆவது ஓவரை சேஸ் வீசினார். பந்தினை எதிர்கொண்ட கோலி, அதனை வேகமாக அடிக்க முயல, ரோஹித் மீது பட்டு, பவுலர் கைக்கு அருகே வந்தது.

virat kohli epic response for pollard about rohit sharma gone viral

அந்த சமயத்தில், வேகமாக ரன் ஓட ரோஹித் முயற்சி எடுத்தார். அப்போது, அவரை ரன் அவுட் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்குள் ரோஹித் கிரீஸுக்குள் மீண்டும் வந்து விட்டார். மேலும், மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் நின்ற பொல்லார்டும், அந்த முயற்சியில் இறங்கி தோல்வி அடைந்தார்.

கோலி பதில்

இதனைக் கண்ட கோலி, பொல்லார்ட்டிடம், 'ரோஹித்தை அவ்வளவு எளிதில் ரன் அவுட் செய்து விட முடியாது போலி (பொல்லார்ட்)' என நகைச்சுவையாக தெரிவித்தார். இதனைக் கேட்டதும், ரோஹித்தும் சிரிக்க, பொல்லார்ட்டும் ஒரு விதமான ரியாக்ஷனைக் கொடுத்தார்.

virat kohli epic response for pollard about rohit sharma gone viral

ஐபிஎல் தொடரில், ஒரே அணியில் இடம்பெற்றுள்ள ரோஹித் மற்றும் பொல்லார்ட் ஆகியோர், நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'கோலி' வந்ததும் 'பொல்லார்ட்' போட்ட ஸ்கெட்ச்.. கொஞ்சம் கூட அசராத விராட்.. "கிங்'யா எங்காளு"

CRICKET, VIRAT KOHLI, POLLARD, ROHIT SHARMA, INDIA VS WEST INDIES, T20MATCH, பொல்லார்ட், கோலி, ரோஹித், டி 20 தொடர்

மற்ற செய்திகள்