Video: அடக்கடவுளே.. 'அம்புட்டு' தூரம் போயிடுச்சா?.. வில்லியம்ஸை 'வச்சு' செஞ்ச விராட்.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸ் கொடுத்த நோட்புக் பதிலடியை அவருக்கு விராட் திருப்பி அளித்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் விராட் 19 ரன்களில் அவுட் ஆனார். பதிலுக்கு வில்லியம்ஸ் 'ஷ்ஷ்' என கலாய்த்து இருந்தார். போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது.

Video: அடக்கடவுளே.. 'அம்புட்டு' தூரம் போயிடுச்சா?.. வில்லியம்ஸை 'வச்சு' செஞ்ச விராட்.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

இந்தநிலையில் இன்று நடக்கும் 3-வது போட்டியில் விராட் கோலியின் பதிலடியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. வில்லியம்ஸ் பந்தில் சிக்ஸ் அடித்த கோலி, பந்து அவ்வளவு தூரம் போயிடுச்சா? என்பதுபோல ஒரு ரியாக்ஷன் கொடுத்து வில்லியம்ஸை வெறுப்பேற்றினார்.

29 பந்துகளில் 70 ரன்கள் குவித்த விராட்டை ரசிகர்கள் பலரும் மனதார பாராட்டி வருகின்றனர். விராட், ராகுல், ரோஹித் அதிரடியால் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 240 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 2-வதாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 141 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.