VIDEO: கேட்கவா, வேண்டாமா..? குழம்பி நின்ற ரோகித்.. வேகமாக ஓடி வந்த கோலி.. முதல் மேட்சே ‘வேறலெவல்’ சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் இடையில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: கேட்கவா, வேண்டாமா..? குழம்பி நின்ற ரோகித்.. வேகமாக ஓடி வந்த கோலி.. முதல் மேட்சே ‘வேறலெவல்’ சம்பவம்..!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இன்று (06.02.2022) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை பொறுத்தவரை சஹால் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவை விராட் கோலி ரிவியூ எடுக்க கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்போட்டியின் 22-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சஹால் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் சஹாம்ரா புரூக்ஸின் பேட்டில் பந்து லேசாக எட்ஜாகி சென்றது. உடனே கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், அம்பயரிடம் அவுட் கேட்டார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

Virat Kohli convinced Rohit Sharma to take review in 1st ODI

உடனே வேகமாக வந்த கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பந்திடம், பந்து பேட்டில் பட்டதா? அல்லது கால் பேடில் பட்டதா? என கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி, ‘ரோகித், பந்து முதலில் பேட்டில்தான் பட்டது. அந்த சத்தத்தை 100 சதவீதம் கேட்டேன். அதனால் இது அவுட் என்றே நான் நினைக்கிறேன். ரிவியூ கேளுங்கள்’ என கூறினார்.

இதனை அடுத்து ரோகித் சர்மா மூன்றாம் அம்பயரிடம் ரிவியூ கேட்டார். அப்போது பந்து முதலில் பேட்டில் லேசாக பட்டுச் சென்றது தெரியவந்தது. இதனால் மூன்றாம் அம்பயர் அவுட் என அறிவித்தார். இந்த நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்