Video : "மேட்ச் தோத்தா என்ன இப்போ??.. அத எல்லாம் மறந்துட்டு இப்டி பண்ற மனசு இருக்கே.." போட்டிக்கு பின் 'கோலி' செய்த 'காரியம்'.. நெகிழ்ந்து போன 'நெட்டிசன்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற்று, தவிர்க்க முடியாத அணியாக வலம் வந்த  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது போட்டியில், தோல்வி அடைந்தது.

Video : "மேட்ச் தோத்தா என்ன இப்போ??.. அத எல்லாம் மறந்துட்டு இப்டி பண்ற மனசு இருக்கே.." போட்டிக்கு பின் 'கோலி' செய்த 'காரியம்'.. நெகிழ்ந்து போன 'நெட்டிசன்கள்'!!

இதனைத் தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் (KL Rahul) 91 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடிய நிலையில், பெங்களூர் அணியின் வெற்றிக் கனவை தனியாளாக தகர்த்தார் ஹர்ப்ரீத் பிரார் (Harpreet Brar). கோலியின் விக்கெட்டை முதலில் எடுத்த ஹர்ப்ரீத், அதற்கு அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல்லையும் காலி செய்தார். தொடர்ந்து, தான் வீசிய அடுத்த ஓவரில், மற்றொரு பெங்களூர் வீரர் டிவில்லியர்ஸின் விக்கெட்டையும் எடுக்க, பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பு தகர்ந்தது.

இருபது ஓவர்கள் முடிவில், பெங்களூர் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. பெங்களூர் அணியின் அதிரடி வீரர்களை அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்து, போட்டியின் திருப்புமுனையாக அமைந்த ஹர்ப்ரீத் பிரார், ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.

Virat kohli congratulates harpreet brar after their loss

இதனிடையே, இந்த போட்டியின் தோல்விக்கு பின்னர், பெங்களூர் கேப்டன் கோலி செய்த செயல் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தங்களது வெற்றி வாய்ப்பை மொத்தமாக சிதைத்த பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் பிராரை, கோலி பாராட்டும் வீடியோ ஒன்று, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

 

மற்ற செய்திகள்