"உலகத்துலயே பெரிய உருட்டு இது தான்".. இறைச்சி குறித்து ரசிகரின் கருத்திற்கு விராட் கோலி போட்ட கமெண்ட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கும் முன்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்கவில்லை என கடும் விமர்சனம் எழுந்து வந்தது.
ஆனால் அவை அனைத்திற்கும் ஆசிய கோப்பையில் சதம் அடித்து பதிலடி கொடுத்திருந்த விராட் கோலி, டி20 உலக கோப்பை தொடரிலும் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்து இருந்தார். ஆறு போட்டிகள் ஆடிய விராட் கோலி 296 ரன்கள் எடுத்து 2022 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்திருந்தார். இதனால், தனது பேட்டிங் மீதான விமர்சனங்களையும் தவிடு பொடி ஆக்கி இருந்தார்.
டி 20 உலக கோப்பை தொடருக்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வில் உள்ள விராட் கோலி, வங்காளதேச அணிக்கு எதிராக டிசம்பர் 4 ஆம் தேதி ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளார். இதற்காக தற்போதிலிருந்தே விராட் கோலி தயாராகி வருவதாகவும் தெரிகிறது. மேலும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலி பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கூட சில கமெண்ட்களை செய்திருந்தனர். அப்படி ஒரு சூழலில் ரசிகர் ஒருவர் செய்த கமெண்ட்டிற்கு விராட் கோலி செய்த பதில் கமெண்ட் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
சைவம் மட்டுமே விராட் கோலி விரும்பி சாப்பிட்டு வரும் நிலையில், அவர் பகிர்ந்த வீடியோவில் மிகவும் ஃபிட்டாக, Muscle உடன் உள்ளார். இதனை குறிப்பிட்டு ரசிகர் ஒருவர், இறைச்சி உண்டால் தான் உடல் வலிமையாகும் என பலரும் கூறுவது தவறு என்பதை விராட் கோலி நிரூபித்ததாக குறிப்பிட்டு கமெண்ட் ஒன்றை செய்திருந்தார்.
இதன் கீழ் கமெண்ட் செய்த விராட் கோலி, "ஹாஹா, உலகில் உள்ள மிகப் பெரிய அர்த்தமற்ற கருத்து அது தான்" என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்