‘அப்போ கங்குலி, இப்போ இவர்’!.. கேப்டனாக மோசமான சாதனை ஒன்றை படைத்த கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 67 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
இதனை அடுத்து 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 15.3 ஓவர்களில் 130 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 49 ரன்கள் அடித்தார்.
இப்போட்டியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் வீசிய ஓவரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக கோலி 14 முறை டக் அவுட்டாகியுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி 13 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்திருந்தார். அதனை தற்போது கோலி முறியடித்துள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான, தோனி 11 முறையும், கபில்தேவ் 10 முறையும், முகமது அசாருதீன் 8 முறையும் டக் அவுட்டாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்