"கோலியின் கோபம் தான் அவரோட பெஸ்ட் Friend".. KL ராகுல்.ஓப்பன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வரும் KL ராகுல் விராட் கோலியின் கோபம் குறித்து பேசியிருக்கிறார்.
KL ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது பயணத்தை துவங்கினார் ராகுல். இவர் இதுவரையில் 43 டெஸ்ட் போட்டிகளிலும் 42 ஒருநாள் போட்டிகளிலும் 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
கோபம்
விராட் கோலி எப்போதுமே ஆக்ரோஷமான தனது நடவடிக்கைகளின் மூலமாக அறியப்படுபவர். கிரிக்கெட் களத்தில் தன்னுடைய கோபத்தை வெற்றியை நோக்கி செலுத்தும் உத்வேகமாக மாற்றக்கூடிய வலிமை அவருக்கு உண்டு. இதுகுறித்துப் பேசிய ராகுல்," நான் வளர்ந்தவுடன், அமைதியாக இருக்க விரும்பியதில்லை. இதை விராட்டும் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது சிறந்த நண்பர் அவரது கோபம் தான். அந்த கோபத்தை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதை சரியான விஷயங்களாக மாற்றுவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் நெருப்பு இருக்கிறது. உங்களுக்குள் நெருப்பு இல்லையென்றால், கிரிக்கெட் போன்ற விளையாட்டையோ அல்லது வாழ்க்கையில் எதையும் நீங்கள் சாதிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
கேப்டன் பதவி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் தனக்கு கேப்டன் பதவி கிடைத்த விதத்தை ராகுல் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய அவர்,"ஜோஹன்னஸ்பெர்க் டெஸ்ட் போட்டிக்காக பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது என்னிடம் வந்த கோலி தனக்கு முதுகு பிடிப்பு இருப்பதாகவும் அதனால் என்னை கேப்டனாக நியமிக்க இருப்பதாகவும் கூறினார். ஆனால், விராட் கோலி விளையாட வேண்டும் என நினைத்தேன்" என்றார்.
மகிழ்ச்சி
தன்னுடைய முதல் கேப்டன் அனுபவத்தை விவரித்த ராகுல்," பயிற்சிக்கு பிறகு விராட் கோலி விளையாடவில்லை என்றும் என்னை டாஸ்-காக செல்லுமாறும் பயிற்சியாளர் கூறினார். என்னிடம் பிளேசர் இல்லை. ஆகவே விராட் கோலியின் பிளேசரை வாங்கிக்கொண்டு சென்றேன். அந்த தருணம் எனக்கு மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது" என்றார்.
மற்ற செய்திகள்