RRR Others USA

"இந்த தடவ நாங்க ஐபிஎல் கப் ஜெயிச்சா.." 'Emotional' ஆன கோலி.. இதுக்காகவாச்சும் அவங்க ஜெயிக்கணும்.. மனம் உருகும் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஒரு போட்டியில் ஆடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அதில் தோல்வியைத் தழுவி இருந்தது.

"இந்த தடவ நாங்க ஐபிஎல் கப் ஜெயிச்சா.." 'Emotional' ஆன கோலி.. இதுக்காகவாச்சும் அவங்க ஜெயிக்கணும்.. மனம் உருகும் ரசிகர்கள்

"ப்பா, இப்படி கேட்ச் புடிக்குறது ரொம்ப கஷ்டம்'ங்க.." பறவையாய் மாறிய இளம் வீரர்.. உறைந்து போன ரசிகர்கள்.. வைரல் வீடியோ

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 205 ரன்கள் அடித்திருந்த போதும், இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, ஒரு ஓவர் மீதம் வைத்து இலக்கை எட்டிப் பிடித்தது.

நல்ல ரன்னாக இருந்தாலும், கடைசி கட்டத்தில் பெங்களூரின் பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் கடுமையாக சொதப்ப, தோல்வியை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோலி - டிவில்லியர்ஸ் 'Friendship'

முன்னதாக, கடந்த சீசன் வரை பெங்களுர் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, அந்த பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அதே போல, பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த டிவில்லியர்ஸும், ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளப் போவதில்லை எனக்கூறி தனது ஓய்வு முடிவினை அறிவித்திருந்தார். பெங்களூர் அணியில் கோலி - டிவில்லியர்ஸ் நட்பு பற்றி, ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் தெரியும்.

virat kohli becomes emotional after ab devilliers decision

'Emotional' ஆன கோலி

டிவில்லியர்ஸ் ஓய்வினை அறிவித்த போது, பெங்களூர் அணி ரசிகர்கள் எந்த அளவுக்கு வருந்தினார்களோ, அதே அளவுக்கு கோலியும் வருந்தினார். இந்நிலையில், டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவு பற்றி நெகிழ்ச்சி தகவல் ஒன்றை, கோலி தற்போது வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை பெங்களூர் அணி, தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

டிவில்லியர்ஸ் அனுப்பிய 'வாய்ஸ்' நோட்

இதில் பேசும் கோலி, "டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவை எடுக்க வேண்டும் என தீர்மானித்தது, எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது. உலக கோப்பை முடித்து விட்டு, நாங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது, டிவில்லியர்ஸ் எனக்கு ஒரு வாய்ஸ் நோட்டை அனுப்பினார். அவரின் ஓய்வு முடிவு குறித்த அதனை நான் கேட்டு விட்டு, அருகே இருந்த அனுஷ்காவை மிகவும் சோகமாக பார்த்தேன்.

அப்படி நடக்க கூடாதுனு நெனச்சேன்

அவர் என்ன என்று கேட்டதும், டிவில்லியர்ஸ் அனுப்பிய மெசேஜ் மற்றும் வாய்ஸ் நோட் பற்றி சொன்னேன். 'என்னிடம் எதுவும் சொல்ல வேண்டாம்' என்று அனுஷ்கா என்னிடம் கூறினார். கடந்த சீசனின் போதே, இத்துடன் டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவை எடுப்பார் என நான் கணித்திருந்தேன். ஏனென்றால், அவருடைய பேச்சு அப்படி தான் இருந்தது. நிச்சயம் அப்படி நடந்து விடக் கூடாது என நான் நினைத்தேன்.

virat kohli becomes emotional after ab devilliers decision

பின்னர் அந்த வாய்ஸ் நோட் கேட்டதும் நான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டேன். ஏனென்றால், நான் அவருடன் பல தருணங்களை நான் பெங்களூர் அணியில் பகிர்ந்துள்ளேன். எனது அருகே தான் அவரும் இருந்துள்ளார். நாங்கள் இந்த முறை, ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தால், டிவில்லியர்ஸை நினைத்து தான் நான் அதிகம் உணர்ச்சிவசப்படுவேன்.

நான் அனுபவிப்பதை விட, அது அவருக்கு எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை தான் நினைத்து பார்ப்பேன். டிவில்லியர்ஸ் ஒரு சிறந்த மனிதர்" என உணர்ச்சிபூர்வமாக கோலி குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் காணும் ஆர்சிபி ரசிகர்கள், கோலியை விட அதிகம் மனம் உருகி போயுள்ளனர். கோலி - டிவில்லியர்ஸ்க்கு வேண்டி, பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

தமிழக வீரருக்கு சச்சினின் 'ஸ்பெஷல்' அட்வைஸ்.. மிரட்டலாக ஆரம்பித்து பட்டையைக் கிளப்பிய வீரர்.. அடுத்த மேட்சும் அப்ப சம்பவம் இருக்கு..

CRICKET, IPL, VIRAT KOHLI, AB DE VILLIERS, IPL 2022, விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஐபிஎல்

மற்ற செய்திகள்