'ஒரே போட்டியில் இரண்டு சாதனை'... ‘கிங் ஆன கேப்டன் விராட் கோலி’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில், இந்திய கேப்டன் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை தகர்த்தார்.

'ஒரே போட்டியில் இரண்டு சாதனை'... ‘கிங் ஆன கேப்டன் விராட் கோலி’!

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் நடக்கும் 34-வது லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 37 ரன்கள் அடித்தபோது, சரியாக 20,000 ரன்களை எடுத்தார். கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் மற்றும லாரா 453 போட்டிகளில் செய்த சாதனையை, 417 ஒருநாள் போட்டிகளில் இந்த சாதனையை விராட் கோலி  நிகழ்த்தி இருக்கிறார்.

மேலும் இப்போட்டியில் அரைசதம் கடந்த இந்திய கேப்டன் விராட் கோலி, தற்போதைய உலகக்கோப்பை அரங்கில், அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ‘நம்பர்-1’ இடத்திற்கு முன்னேறினார். இதன் மூலம் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்த கேப்டன்களில், முன்னாள் தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் (4 அரைசதம்), சாதனையை கோலி சமன் செய்தார்.