கடைசி பந்துக்கு முன்னாடி.. கோலி சொன்ன விஷயம்.. அத கேக்காம அஸ்வின் எடுத்த முடிவு.. பரபர நிமிஷங்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பைத் தொடரில், தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றிருந்தது இந்திய அணி.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி அன்று சூப்பர் 12 சுற்று ஆரம்பமாகி இருந்தது. இந்த சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்து இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித், பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி அடிய இந்திய அணியும் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஓரளவு தடுமாற்றம் கண்டது. பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அது மட்டுமில்லாமல் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா அணி, பட்டையைக் கிளப்பி இருந்தது. வெற்றியுடன் டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் போது அஸ்வினிடம் கோலி சொன்ன விஷயமும், அதற்கு அஸ்வின் செய்த செயல் குறித்த தகவலும் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி ஆடியது அவரது கிரிக்கெட் பயணத்தில் சிறந்த இன்னிங்ஸ் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே, கடைசி பந்திற்கு முன்பாக தான் அஸ்வினிடம் பேசியது குறித்து சில கருத்துக்களை விராட் கோலி தெரிவித்துள்ளார்.
"நான் அஸ்வினிடம் பந்தை கவர் திசையில் அடியுங்கள் என கூறினேன். ஆனால், அவர் கூடுதல் அறிவை பயன்படுத்தி அந்த பந்தை வைடாக மாற்றி இருந்தார். அது மிகவும் துணிச்சலான செயல். இதனால், கடைசி பந்தில் கேப்பில் அடிக்க வேண்டும் என்ற நிலை தான் இருந்தது" என கோலி தெரிவித்தார். அவர் கூறியது போலவே, தைரியமாக வைடு வாங்கிய அஸ்வின் கடைசி பந்தில் சிறப்பான இடத்தில் அடித்து அணியை வெற்றி பெறவும் உதவி இருந்தார்.
மற்ற செய்திகள்