Fake Fielding செய்தாரா கோலி?.. கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பிய விவாதம்.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி ஃபீல்டிங் செய்தது தொடர்பாக இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ள விவகாரம், கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது.

Fake Fielding செய்தாரா கோலி?.. கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பிய விவாதம்.. பின்னணி என்ன??

சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 வில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இதுவரை நான்கு போட்டிகள் விளையாடியுள்ள இந்திய அணி, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மட்டும் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது.

இதில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று (03.11.2022) நடந்த போட்டியில் கோலி பீல்டிங் செய்த விதம் தான் அதிக விவாதத்தை உண்டு பண்ணி உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை பங்களாதேஷ் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து 16 ஒவர்களில் 151 ரன்கள் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

virat fake fielding issue against bangladesh create controversy

கடைசி ஓவரில், 20 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரில் 14 ரன்களை மட்டும் தான் பங்களாதேஷ் எடுத்திருந்தது. இதனால், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. முன்னதாக பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஏழாவது ஓவரை அக்சர் படேல் வீசி இருந்தார்.

அப்போது லிட்டன் தாஸ் அடித்த பந்து நேராக அர்ஷ்தீப் சிங் கைக்குச் சென்றது. அவர் பந்தை எறிய அது கோலியை தாண்டிய போது பந்தை பிடிக்காமல் பிடித்தது போலவும், ஸ்டெம்பை நோக்கி எறிவது போலவும் விராட் கோலி வேடிக்கையாக பாவனை செய்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் இந்த சம்பவத்தை கள நடுவர்கள் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதான் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

virat fake fielding issue against bangladesh create controversy

இதுகுறித்து பேசி இருந்த வங்கதேச அணி வீரர் நூருல் ஹசன், "இதற்கு ஐந்து ரன்கள் தண்டனையாக கொடுத்திருக்கலாம். அது எங்களுக்கு சாதகமாக முடிந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார். அதே போல, இதுகுறித்து ட்வீட் செய்திருந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "ஃபேக் பீல்டிங் விஷயத்தை நடுவர்கள், பேட்ஸ்மேன்கள், ஏன் நாம் கூட அதனை கவனிக்கவில்லை என்பது தான் உண்மை. ஐசிசி விதி 41.5 படி ஃபேக் ஃபீல்டிங்கை தண்டிக்க வழி செய்கிறது. ஆனால் யாருமே அதை பார்க்காத போது என்ன செய்ய முடியும்"  என குறிப்பிட்டுள்ளார்.

virat fake fielding issue against bangladesh create controversy

ஹர்ஷாவை போல தான் ரசிகர்கள் பலரும் விராட் கோலி செய்ததை பேட்ஸ்மேன்கள் பார்த்திருந்தால் தான் அது அவர்களுக்கு கவன சிதறலை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அப்படி பார்க்காத போது எப்படி அதற்கு பெனால்டி கொடுப்பது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

VIRATKOHLI, IND VS BAN, T20 WORLD CUP, HARSHA BHOGLE

மற்ற செய்திகள்