"இவர் சரியில்ல... இவரை கழட்டி விட்ருங்க"... - 'பிரபல வீரர் பற்றி வந்த மோசமான கமெண்ட்'... 'வைரலாகும் காதலி கொடுத்த பதிலடி!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் வீரர் மாக்ஸ்வெல்லைப் பற்றிய தவறாக பேசியவருக்கு அவருடைய காதலி வினி ராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெறும் ஐபிஎல் 2020 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல், முன்னதாக இந்த வருடம் பிப்ரவரி மாதம் தன்னுடைய காதலி வினி ராமனுடன் திருமண நிச்சயம் நடந்ததை அறிவித்திருந்தார். ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வினி ராமன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் மேக்ஸ்வெல்லுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில், "ஊரடங்கில் இன்னொரு வார இறுதி, நானும் யு.ஏ.இல் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். 4 வாரங்கள் முடிந்துவிட்டன, இன்னும் எவ்வளவோ?" எனப் பதிவிட்டுள்ளார். அதற்குப் பதில் கருத்து பதிவிட்டுள்ள ஒருவர், "மனநலம் பாதிக்கப்பட்ட வெள்ளை நிறத்தவரை விட்டுவிடு வினி ராமன். அவருக்காக நீ பரிதாபப்பட வேண்டும். துரோகம் செய்யாமல் ஒரு இந்தியரைத் தேடிப் பிடி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள வினி ராமன், "நீங்கள் என் பதில் வர வேண்டுமென்று தானே இதைப் போட்டிருக்கிறீர்கள். தருகிறேன். உங்களைப் போல நான் எந்த நிறத்தையும் பார்ப்பதில்லை. ஒருவர் எந்த நாடு, எந்த இனம் என்று பார்க்காமல் என்னால் அன்பு செலுத்த முடியும். அது முழுக்க என் விருப்பம். இணையத்தில் முகமில்லாமல் தெரியும் ஏதோ ஒருவரது கருத்தை வைத்து எனது வாழ்க்கை முடிவுகளை எடுக்க முடியாது. அதை நியாயப்படுத்தவும் தேவையில்லை. நீங்கள் பார்ப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கடந்து சென்று விடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார். இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ள மேக்ஸ்வெல், "உன்னை நினைத்துப் பெருமையடைகிறேன் வினி ராமன். சிலர் இப்படித்தான் உண்மையிலேயே பரிதாபகரமானவர்கள்" எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்