VIDEO : 'இவர்மேல ஃபேன்ஸ்தான் கடுப்பானாங்கன்னு பாத்தா'... 'சகவீரரும் விட்டுவைக்கலயே?!!'... 'CSK மேட்ச்சில் நடந்த பரபரப்பு சம்பவம்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நேற்று பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தி சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளது. முதலில் ஆடிய பஞ்சாப் 4 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுக்க, அதன்பின் ஆடிய சிஎஸ்கே 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. டு பிளசிஸ் - வாட்சன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளனர்.
இருப்பினும் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் பீல்டிங்கில் சில விமர்சனங்கள் எழுந்தன. ஜடேஜா, டு பிளசிஸ் சரியாக பீல்டிங் செய்த போதும், ஜாதவ், பியூஸ் சாவ்லா போன்ற வீரர்களின் பீல்டிங் விமர்சனத்திற்கு ஆளானது. இதனால் தேவையில்லாத சில பவுண்டரிகள் சென்றதால் பயிற்சியாளர் பிளமிங் கூட கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் 16வது ஓவரில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஓவரில் சாம் கரன் பவுலிங் செய்ய, பஞ்சாப் சார்பாக கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரான் இருவரும் பேட்டிங் செய்து வந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே வலுவான பார்ட்னர்ஷிப் உருவாவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதால் கொஞ்சம் சிஎஸ்கே மீது அழுத்தம் அதிகரித்தது.
அப்போது அந்த ஓவரில் பூரான் டீப் கவர் திசையை நோக்கி பந்தை தூக்கி அடிக்க, அங்கு பீல்டர்கள் யாரும் இல்லாத நிலையில், எக்ஸ்ட்ரா டீப் கவர் திசையில் இருந்த ஜாதவ் ஓடி வந்து பந்தை பிடித்தார். ஆனால் அதற்குள் பூரான் இரண்டு ரன்கள் ஓடி விட்டார். அப்போதுதான் ஜாதவ் நினைத்து இருந்தால் ஒரு ரன்னில் கட்டுப்படுத்தி இருக்கலாம், ஆனால் ஜாதவ் அவ்வளவு வேகமாக ஓடவில்லை என ஜடேஜா கடுப்பாகியுள்ளார்.
இப்படியே டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையிலேயே நின்றால் என்ன அர்த்தம். ஏன் இவ்வளவு மெதுவாக வந்தாய் என அவர் கடுமையாக கேள்வி எழுப்பியதாகவும், அதனால் கேதார் ஜாதவும் கோபம் அடைந்தாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்து சாம் கரன் பதற்றம் அடைய, தோனி வந்து சாமிடம் ஏதோ சொல்லவும் அவர் அமைதியாகியுள்ளார். இதையடுத்து அணியில் ஜடேஜாவிற்கும் ஜாதவிற்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு நிலவுகிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது.
— faceplatter49 (@faceplatter49) October 4, 2020
மற்ற செய்திகள்