RRR Others USA

“சிஎஸ்கே இன்னும் ஒரு மேட்ச்ல தோத்தா அவ்ளோதான்”.. தொடர் தோல்வியால் வந்த சிக்கல்.. எச்சரிக்கை செய்த முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் எச்சரிக்கை செய்துள்ளார்.

“சிஎஸ்கே இன்னும் ஒரு மேட்ச்ல தோத்தா அவ்ளோதான்”.. தொடர் தோல்வியால் வந்த சிக்கல்.. எச்சரிக்கை செய்த முன்னாள் வீரர்..!

ஐபிஎல் தொடரில் 15-வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக அமைந்துள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.

இதனை அடுத்து நடந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை சிஎஸ்கே அணி குவித்தது. அதனால் அப்போட்டியில் எப்படியும் சிஎஸ்கே வெற்றி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபாரமாக விளையாடிய லக்னோ அணி, 19.3 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சிஎஸ்கே சந்தித்தது.

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி, முதல் 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்திப்பது இதுதான் முதல்முறை. இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி சிங் எச்சரிக்கை செய்துள்ளார்.

Very difficult to see CSK in top 4 if they lose 1 more match: RP Singh

இதுகுறித்து பேசிய அவர், ‘தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததில் இருந்து சிஎஸ்கேவின் நிலைமை என்ன என்பது புரிகிறது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் அவர்கள் ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாகிவிடும். ஏனென்றால் அவர்களின் ரன்ரேட் மிகவும் மோசமாக உள்ளது. இந்த ஆண்டு 10 அணிகள் விளையாடுவதால், எத்தனை புள்ளிகள் எடுத்தால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதை கணிக்க முடியவில்லை. அதனால் ஒவ்வொரு போட்டியையும் முக்கியமான ஆட்டமாக கருதி விளையாட வேண்டும்.

Very difficult to see CSK in top 4 if they lose 1 more match: RP Singh

சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர், மிடில் என எதுவுமே சரியில்லை. அவர்கள் தங்களது ஆட்டத்தை முன்னெடுத்து செல்வது போன்றே தெரியவில்லை. அதனால் சிஎஸ்கே அணி இனி வரும் போட்டிகளில் எச்சரிக்கையாக விளையாட வேண்டும்’ என ஆர்.பி சிங் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 9-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட உள்ளது. இன்னும் இப்போட்டிக்கு 5 நாள்கள் உள்ளதால் அணியில் தேவையான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CSK, IPL, RP SINGH

மற்ற செய்திகள்