Karnan usa

25 வருஷம் முன்னாடி நடந்த 'அந்த' சம்பவம்...! 'டிவிட்டர்ல வாண்டடா வந்து கிண்டல் செய்த ஜர்னலிஸ்ட்...' - வச்சு செய்த வெங்கடேஷ் பிரசாத்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராகுல் டிராவிட் இந்திராநகர் ரெளடியா இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் வீடியோ அவரின் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்

25 வருஷம் முன்னாடி நடந்த 'அந்த' சம்பவம்...! 'டிவிட்டர்ல வாண்டடா வந்து கிண்டல் செய்த ஜர்னலிஸ்ட்...' - வச்சு செய்த வெங்கடேஷ் பிரசாத்...!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் காரில் நின்றுகொண்டு சத்தமாக 'இந்திராநகர் ரெளடிடா...' என சொல்லும் வீடியோ தற்போது ட்விட்டர் மற்றும் முகநூலில் வைரலாகி வருகிறது.

ராகுல் டிராவிட்டின் ரசிகர்கள் இந்த வீடியோ குறித்து ஆராய்ந்து பார்த்து, இது டிராவிட் நடித்த கிரெடிட் கார்டு தொடர்பான விளம்பர படம் என கூறி வருகின்றனர். இந்த வீடியோவில் ராகுல் டிராவிட், காரில் இருந்து சாலையில் செல்வோர்களை திட்டுவது, கிரிக்கெட் வைத்து கார் கண்ணாடிகளை உடைப்பது காரில் நின்று கொண்டு இந்திராநகர் ரெளடிடா.. என சத்தம் போடுவது என டெரராக நடித்திருப்பார். மேலும் 'இந்திராநகர் ரெளடிடா...' என்ற வாக்கியத்தை பலர் பயன்படுத்தி வைரலாக்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் டிராவிட்டின் 'இந்திராநகர் ரெளடிடா...' என்ற வாசகத்தை எழுதி அதன் கீழ், 'பெங்களூருவில் நான் ஆமீர் சோஹைலுக்கு எதிராக 14.5வது ஓவரில் நானும் இந்திரா நகர் ரவுடி தான்' என குறிப்பிட்டிருந்தார்.

சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுப்பது போல அமைந்த இந்த ட்வீட்டால் பாகிஸ்தான் ஊடகவியலாளர் ட்விட்டர் களத்தில் இறங்கி, வெங்கடேஷ் பிரசாத்தை கிண்டலடித்துள்ளார்.

என்னப்பா ஆச்சு அந்த கிரிக்கெட் தொடரில் என்று கேட்பவர்களுக்கு பதிலாக அதன் குறிப்பு பின்வருமாறு,

1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் பிரசாத்துக்கும், பாகிஸ்தான் வீரர் ஆமிர் சோஹைலுக்கும் இடையே களத்தில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

15-வது ஓவரின் 5-வது பந்தில் வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஆமிர் சோஹைல் உன்னையும் அங்கே விரட்டி விடுவேன் என பொருள் பட சைகை காட்டினார்.

ஆனால் அடுத்த பந்திலேயே ஆமீர் சோஹைலை கிளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் வெங்கடேஷ் பிரசாத்.

தற்போதைய கதையில் வெங்கடேஷ் பிரசாத்தின் அந்த பதிவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் நஜீப் உல் ஹஸ்னைன், வெங்கடேஷ் பிரசாத்தை கிண்டலடிக்கும் வகையில் 'வெங்கடேஷ் பிரசாத்தின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு சாதனை' என குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும் பாகிஸ்தான் ஊடகவியலாளரின் கமெண்டுக்கு பதிலளித்த வெங்கடேஷ் பிரசாத், 'இது மட்டும் இல்லை நஜீப் உல் ஹஸ்னைன் அவர்களே, அதன் பின்னர் மேலும் பல சாதனைகளை செய்திருக்கிறேன். 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற அடுத்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 27 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினேன். 228 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் பாகிஸ்தான் அணி எங்களிடம் தோல்வியடைந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!' என பதிலடியும் கொடுத்துள்ளார்.

முன்னாள் இந்திய வீரரான வெங்கடேஷ் பிரசாத் தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் களத்தில் இருந்த சமயத்தில்1996ம் ஆண்டு முதல் 2001 வரை 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களையும், 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்