‘இன்னும் என்னதான் வேணும்’.. 28 வயசுக்கு அப்புறம் வாய்ப்பு கொடுத்து ஒரு யூஸும் இல்ல.. சிஎஸ்கே வீரருக்காக வந்த குரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇளம் வீரர் ருதுராக் கெய்க்வாட்டுக்கு சீக்கிரமே இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தேர்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக உள்ளது. அதன்படி ஒவ்வொரு தொடரின் போதும் வீரர்களை தேர்வு செய்வது தேர்வுக் குழுவின் கையிலேயே உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது 16 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்தார். அப்போது தேர்வுக்குழு தலைவராக இருந்த ராஜ் சிங் இந்த வாய்ப்பை வழங்கினார். இதற்காக அப்போது பலரும் இவரை விமர்சனம் செய்தனர். ஆனால் சச்சினின் ஆட்டத்தை பார்த்து விமர்சனம் செய்த அனைவரும் வாயடைத்துப் போயினர். சச்சினின் இந்த அபார வளர்ச்சிக்கு அவரை சரியாக தேர்வு செய்து விளையாட வைத்த தேர்வு குழுவினர் ஒரு காரணம்.
அதேபோல் தற்போது கிரிக்கெட் உலகின் ராஜாவாக இருந்து வரும் விராட் கோலியும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று இந்திய அணியில் இடம் பிடித்தார். அப்போது தேர்வுக்குழு தலைவராக இருந்த திலீப் வெங்சர்க்கார் விராட் கோலிக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு அளித்தார். இவர் தற்போது தேர்வுக்குழுவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தி வரும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஒன்றும் 19 வயது ஆகவில்லை, அவருக்கு 24 வயது ஆகிவிட்டது. இன்னும் எவ்வளவு ரன்கள் குவித்தால் அவருக்கு வாய்ப்பு வழங்குவீர்கள்? நல்ல பார்மில் இருக்கும்போதே வீரர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 28 வயதுக்குப் பிறகு வாய்ப்பு கொடுத்து ஒரு பயனும் இல்லை’ என காட்டமாக கூறியுள்ளார் சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் ஹாட்ரிக் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்