Udanprape others

அந்தர் ‘பல்டி’னு சொல்லுவாங்களே அது இதுதான்.. வார்ம் அப் மேட்ச்லையே வாகனின் வாயை அடைத்த இந்தியா.. அப்படி என்ன பேசினார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த நாடு கோப்பையைக் கைப்பற்றும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தர் ‘பல்டி’னு சொல்லுவாங்களே அது இதுதான்.. வார்ம் அப் மேட்ச்லையே வாகனின் வாயை அடைத்த இந்தியா.. அப்படி என்ன பேசினார்..?

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன. தற்போது அனைத்து நாட்டு வீரர்கள் பல டி20 லீக் போட்டிகளில் விளையாடி சிறப்பான ஃபார்மில் உள்ளதால், எந்த நாடு இந்த தடவை கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Vaughan U-Turn, After Team India consecutive wins in warm-up match

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் (Michael Vaughan), டி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ள அணி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், ‘இந்த முறை இங்கிலாந்து அணிதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்சர் போன்ற வீரர்கள் இல்லையென்றாலும், இங்கிலாந்து அணி வலுவாகவே உள்ளது. கேப்டன் இயான் மோர்கனின் பேட்டிங் சிறப்பாக இல்லைதான், ஆனால் கேப்டன்ஷி அருமையாக உள்ளது.

Vaughan U-Turn, After Team India consecutive wins in warm-up match

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான் சவாலாக இருக்கும். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஏனென்றால் அந்த அணியில் மேக்ஸ்வெல் ஒருவர் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார்’ என மைக்கேல் வாகன் கூறினார்.

Vaughan U-Turn, After Team India consecutive wins in warm-up match

இந்த நிலையில் நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனைப் பார்த்த பிறகு ட்வீட் செய்த மைக்கேல் வாகன், ‘பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாடிய விதத்தைப் பார்த்தபின், அவர்கள்தான் டி20 உலகக்கோப்பை வெல்வார்கள் என நினைக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணிதான் கோப்பையை வெல்லும் எனக் கூறிய மைக்கேல் வாகன், பயிற்சி ஆட்டங்களில் இந்தியா வென்ற பின் அப்படியே பல்டி அடித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்