"'கோலி' அவ்ளோ பெரிய பிளேயரா என்ன??.. அவர ஆஹா, 'ஒஹோ'ன்னு சொல்றதுக்கு 'காரணம் என்னன்னு தெரியுமா??.." 'இந்திய' ரசிகர்களை மீண்டும் கடுப்பாக்கிய 'வாகன்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் (Michael Vaughan), கிரிக்கெட் அணியினர் மற்றும் வீரர்கள் குறித்து தனக்குத் தோன்றும் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இல்லாமல், வெளிப்படையாக பேசுபவர்.
உதாரணத்திற்கு, இந்த ஆண்டு நடைபெற்றிருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், இந்தியாவிலுள்ள பிட்ச் மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக நேரடியாக வாகன் விமர்சனம் செய்திருந்தார்.
இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும், வாகனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வில்லியம்சன் மற்றும் கோலி ஆகியோரை ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார் வாகன். 'கேன் வில்லியம்சன் ஒரு வேளை இந்தியராக பிறந்திருந்தால், நிச்சயம் அவர் உலகின் நம்பர் 1 வீரராக இருந்திருப்பார்.
ஏனெனில், இந்திய வீரரான விராட் கோலியை நீங்கள் சிறந்த வீரர் இல்லை எனக் கூறி விட முடியாது. அப்படி கூறினால், சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் உங்கள எதிர்ப்பார்கள். இதனால், கோலி சிறந்த வீரர் என நீங்கள் கூறினால் மட்டுமே, உங்களுக்கு அதிகம் லைக்குகள் மற்றும் ஃபாலோயர்கள் உருவாகும்.
ஆனால், என்னைப் பொறுத்தவரையில், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் வில்லியம்சன் தான் சிறந்த வீரர். அவர் ஆடும் விதம், அமைதையான நடத்தை, பணிவு என அனைத்து குணத்திலும் உயர்ந்து நிற்கிறார். இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு ஆடுகளங்களில், சமீப காலமாக கோலி தடுமாறி வருகிறார். ஆனால், வில்லியம்சன் மிகவும் தேர்ந்த வீரராக ஆடி வருகிறார்.
இதனால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், கோலிக்கு சமமான ஒருவராக வில்லியம்சன் நிச்சயம் இருப்பார். கோலியைப் போல, இன்ஸ்டாக்ராமில் 100 மில்லியன் ஃபாலோயர்களையும், ஆண்டிற்கு 30 முதல் 40 மில்லியன் டாலர்கள் சம்பாதிப்பதிலும் அல்ல. களத்தில் அவர் வெளிப்படுத்தும் நிலைத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இனி வரும் போட்டிகளில், கோலியை விட, வில்லியம்சன் அதிக ரன்களைக் குவிப்பார் என்றே நான் கருதுகிறேன்' என வாகன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்