போட்டிக்கு நடுவே நடந்த தில்லு முல்லு.. சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பண்ட்??.. என்ன சிம்ரன் இதெல்லாம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்கா : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரரின் விக்கெட் ஒன்று, அதிகம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

போட்டிக்கு நடுவே நடந்த தில்லு முல்லு.. சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பண்ட்??.. என்ன சிம்ரன் இதெல்லாம்?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே, தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 202 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே எல் ராகுல் 50 ரன்களும், அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 7 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.

உலகின் மிகப்பெரிய நீல ரத்தினக்கல்... 2,500 கோடி ரூபாய் மதிப்பு... கண்டெடுத்த இலங்கைக்கு பேரதிர்ஷ்டம்..!

கிளப்பிய சர்ச்சை

Van der dussen catch by rishabh pant creates controversy

பின்னர், இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 35 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 58 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி உள்ளது. அது மட்டுமில்லாமல், இன்னும் 3 நாட்கள் இருப்பதால், நிச்சயம் இந்த போட்டியில் முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தென்னாப்பிரிக்க வீரர் ஒருவரின் விக்கெட், சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Van der dussen catch by rishabh pant creates controversy

நடையைக் கட்டிய வீரர்

மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக, கடைசி ஓவரில், தென்னாப்பிரிக்க வீரர் வெண்டர் டுசன், ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில், ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உடனடியாக, பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அவுட்டிற்கு அப்பீல் செய்ய, நடுவரும் அவுட் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, வெண்டர் டுசன் அங்கிருந்து நடையைக் கட்டினார்.

விரைவில் பேரிடர் காலம் முடிவுக்கு வருகிறது.. ஒமைக்ரான் குறித்து விஞ்ஞானிகள் முழு விளக்கம்

ரிஷப் பண்ட் மீது கண்டனம்

Van der dussen catch by rishabh pant creates controversy

இந்நிலையில், அவர் அவுட் ஆனது ரீப்ளேயில் இல்லை என்பது போல தெரிந்தது. அதாவது, பண்ட் கைக்கு பந்து செல்வதற்கு முன்னர், கீழே பட்டு, பவுன்ஸ் ஆகி, பிறகு கேட்ச் ஆனது போல இருந்தது. அவுட்டில்லை என்ற போதும், அவுட்டிற்காக அப்பீல் செய்ததால், ரிஷப் பண்ட் மீது அதிக கண்டனங்கள் எழுந்தது. அந்த சமயத்தில், வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், வெண்டர் டுசன், ரிவியூ கேட்காமல் சென்றது அவரின் தவறு தான் என்று குறிப்பிட்டார்.

புகாரளித்த கேப்டன்

இந்திய அணியின் பக்கம் தவறு இருந்ததால், வெண்டர் டுசன் மீண்டும் களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்ட நேரமாகியும் அப்பீல் செய்யாத காரணத்தினால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடடையே, மத்திய உணவு இடைவேளையின் போது, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் மற்றும் அந்த அணியின் நிர்வாகத்தினர் சிலர், போட்டி நடுவர் மற்றும் மூன்றாம் நடுவர் ஆகியோரை சந்தித்து இதுபற்றி புகாரளித்துள்ளனர்.

Van der dussen catch by rishabh pant creates controversy

அதிக நேரம் நடுவர்களிடம் அவர்கள் உரையாடினார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், நேரம் அதிகம் கடந்து விட்டது என்பதால், வெண்டர் டுசனின் அவுட் மறுபரிசீலனை  செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

VAN DER DUSSEN, RISHABH PANT, CONTROVERSY, CATCH, ரிஷப் பண்ட், இரண்டாவது டெஸ்ட்

மற்ற செய்திகள்