"ரெய்னா'வ எடுக்கல'ன்னு சொல்லி என்ன தான் திட்டுனாங்க.." பிரபல சிஎஸ்கே வீரர் பகிர்ந்த விஷயம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வந்த ராபின் உத்தப்பாவை, சிஎஸ்கே அணி கடந்த 2021 ஆம் ஆண்டு, டிரேடிங் முறையில் வாங்கிக் கொண்டது.
தேசிய யோகாசனா சாம்பியன்ஷிப் - மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன யோகா மாணவிகள் சாதனை
தொடர்ந்து, மீண்டும் இந்தாண்டு மெகா ஏலத்தில் உத்தப்பாவை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ், அவரை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.
சீனியர் வீரர் என்றாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை அளித்து வருகிறார் உத்தப்பா. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், அதிரடியாக ஆடி அரை சதமடித்திருந்தார்.
நல்ல தொடக்கம் கொடுத்த உத்தப்பா
முன்னதாக, 2021 ஆம் ஆண்டு பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிகளில் சென்னை அணிக்காக களமிறங்கிய உத்தப்பா, அதிரடியாக ஆடி ரன்கள் குவித்திருந்தார். இதனால், அவர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே இந்த முறை ஏலத்தில் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக ஆடுவதற்கு முன்பாகவே, தோனியும், உத்தப்பாவும் சிறந்த நண்பர்கள் தான்.
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக இணைந்த பிறகு, தோனி தன்னிடம் என்ன பேசினார் என்பது பற்றியும், மீண்டும் சிஎஸ்கே அணிக்காக ஆடி வருவது பற்றியும் உத்தப்பா தற்போது மனம் திறந்துள்ளார். "சிஎஸ்கே அணியில் நான் இணைந்த பிறகு, தோனி என்னிடம் பேசிய விஷயங்களில் நான் விரும்பியது எதுவென்றால், உடனடியாக நான் ஆடும் லெவனில் இடம்பெறமாட்டேன் என்பது தான். அதே போல, அணியினரும் எனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்கும்படி சொன்னார்கள்.
ரெய்னாவை எடுக்காததால் விமர்சனம்
ஆனால், நான்கு முதல் ஐந்து நாட்களில், பயிற்சியாளர் அல்லது மற்ற யாராவது ஒருவர் என்னிடம் வந்து பேசிக் கொண்டே தான் இருந்தார்கள். நான் ஏலத்தில் மீண்டும் சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்ட போது, 80 சதவீதம் பாசிட்டிவ் கமெண்ட்டுகளும், 20 சதவீதம் நெகட்டிவ் கமெண்ட்டுகளும் வந்தது. இது சாதாரணமான ஒன்று தான். ஆனால், இதில் பல நெகட்டிவ் கமெண்ட்டுகள் என்னை நோக்கி வந்ததற்கான காரணம், ரெய்னா இந்த ஏலத்தில், சிஎஸ்கே அணிக்காக தேர்வாகவில்லை என்பது தான்.
சிஎஸ்கே அணிக்காக இத்தனை ஆண்டுகள் ஆடி வந்த ஒருவரிடம் உள்ள விசுவாசத்தின் பெயரில் தான், நான் என் மீதான விமர்சனத்தினை எடுத்துக் கொண்டேன். என்னை பற்றிய தனிப்பட்ட ஒன்றாக அவை அமையவில்லை. ரெய்னா மீதுள்ள விசுவாசத்தை எங்காவது வெளிக்காட்ட வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்" என தெரிவித்துள்ளார்.
கடந்த முறை ஐபிஎல் கோப்பையை நான்காவது முறையாக தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்