"என்ன விட்டுட்டு போய்டாதீங்க".. இந்தியாவுக்கான விமானத்தை தவறவிட்ட ஆஸி வீரர்.. வைரலாகும் 'மீம்' போஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கான விசா கிடைக்காததால் தன்னால் இந்தியாவிற்கு பயணிக்க முடியவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக ஆஸி. கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

"என்ன விட்டுட்டு போய்டாதீங்க".. இந்தியாவுக்கான விமானத்தை தவறவிட்ட ஆஸி வீரர்.. வைரலாகும் 'மீம்' போஸ்ட்..!

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | தண்டனை சட்டத்தில் இதெல்லாம் சேர்க்கப்பட வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு.. முழு விபரம்..!

இதனிடையே இது தொடர்பாக அவர் பகிர்ந்த மீம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இரு அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. அதன் பின்னர் டெல்லி, தரம்சாலா மற்றும் அகமதாபாத்தில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

Usman Khawaja Shares Meme After he misses Flight to India

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜாவிற்கு இந்திய விசா கிடைக்காததால் அவரால் இந்திய வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் "இந்தியாவுக்கான விசாவுக்காக காத்திருக்கும் போது" என குறிப்பிட்டு அதனுடன் நார்க்கோஸ் சீரிஸ் ஸ்டில் ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் உஸ்மான் கவாஜாவிற்கு விசா கிடைத்து விட்டதாகவும் அவர் விரைவில் இந்தியா திரும்புவார் எனவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து உஸ்மான் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தான் இந்தியாவிற்கு வந்து கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் கவாஜா பகிர்ந்து இருந்த மீம் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

கடைசியாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி முதலில் ஒருநாள் தொடரில் விளையாடியது. பின்னர் டி20 தொடர் நடைபெற்றது. இரண்டு தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் குறித்து இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read | மொத்த நாட்டையும் பதற வச்ச கேப்ஸ்யூல்.. பாலைவனத்துக்கு நடுவே நடந்த மிராக்கிள்.. முழு விபரம்..!

USMAN KHAWAJA, USMAN KHAWAJA SHARES MEME, FLIGHT

மற்ற செய்திகள்