‘நல்லா விளையாடியும் டீம்ல இடம் கிடைக்கல... ரொம்ப கஷ்டமா இருக்கு’!.. இளம் வேகப்பந்து வீச்சாளர் வேதனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தாது ஏமாற்றம் அளிப்பதாக இளம்வீரர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷுப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதுகின்றன. இதற்கான 20 வீரர்கள் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. மேலும் அர்சான் நக்வஸ்வாலா, அபிமன்யு ஈஸ்வரன், அவேஷ் கான் மற்றும் பிரசித் கிருஷ்னா ஆகிய நான்கு பேக்கப் வீரர்களும் இடம் பிடித்திருந்துள்ளனர். இந்த அணியே அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியில் தான் இடம்பிடிக்காதது வேதனை அளிப்பதாக இளம் வீரர் உனத்கட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணியில் நான் நிச்சயமாக இடம்பிடிப்பேன் என்ற நம்பினேன். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பேக்கப் வீரர்களே சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அதனால் ரஞ்சி ட்ராபியில் சிறப்பாக செயல்பட்ட என் பெயரை நிச்சயமா தேர்வுக் குழு பரீசீலணை செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்திய அணியில் என்னை ஒரு பேக்கப் வீரராக்கூட தேர்வு செய்வில்லை. இந்திய தேர்வுக் குழுவின் இந்த செயல்பாடு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது’ என உனத்கட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் உனத்கட் அறிமுகமானார். ஆனால் அந்த தொடரில் 26 ஓவர்களை வீசிய அவர் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல், 156 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனை அடுத்து விளையாடிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சீரான ஆட்டத்தை உனத்கட் வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து அவர் ஓரம்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்