எங்க 'மகனா' ஐபிஎல்-ல விளையாடுறான்...? 'எங்களால அழுகைய கண்ட்ரோல் பண்ண முடியல...' - நெகிழ்ந்த SRH வீரரின் தந்தை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் தனது பந்து வீச்சால் ஐபிஎல் போட்டியை கலக்கி வருகிறார்.
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் உம்ரான் மலிக் தற்போது கிரிக்கெட் உலகில் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 21 வயதான உம்ரான் மலிக் நடப்பு ஐபிஎல் சீசனில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சீசனில் இரண்டே ஆட்டங்கள் ஆடியிருந்தாலும், அதில் சராசரியாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்தை வீசி அசத்தியுள்ளார்.
தனது மகன் உம்ரான் மலிக் குறித்து அவரது தந்தை அப்துல் மலிக் பெருமையுடன் பேட்டியளித்துள்ளார். அதில், 'எனது மகன் உம்ரான் 3 வயது முதலே கிரிக்கெட் ஆடி வருகிறார். அவனின் வாழ்நாள் கனவே தொழில்முறை கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது தான்.
இந்த ஐபிஎல் போட்டியில் என் மகன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடுவதை எங்கள் குடும்பமே உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தோம். நானும், எனது மனைவியும் அவன் விளையாடியாதை பார்த்து ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினோம்.
என் மகன் சிறுவயதில் இருந்தே கடினமாக களத்தில் உழைத்துள்ளான். ஒரு நாள் அவன் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவான். நான் ஒரு காய்கறி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.
என்னை எனது மகன் பெருமையடைய செய்துள்ளான். என் மகன் செய்தது ஏதோ ஒரு சாதாரண சாதனை அல்ல. எங்களின் இந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. துணைநிலை ஆளுநர் கூட அவன் விளையாடுவதை பார்த்து வாழ்த்தி இருந்தார்' என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்