அதிவேகமாக பந்து வீசி அக்தர் & பிரெட் லீ சாதனையை முறியடித்த இந்திய வீரர்.. எவ்வளவு வேகம் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அதிவேகமாக பந்து வீசி லீ, அக்தர் சாதனையை பிரபல இந்திய வீரர் முந்தியுள்ளார்.

அதிவேகமாக பந்து வீசி அக்தர் & பிரெட் லீ சாதனையை முறியடித்த இந்திய வீரர்.. எவ்வளவு வேகம் தெரியுமா?

Also Read | இரட்டை சதம் அடித்து விராத் கோலி படைத்த மாஸ் சாதனை.. ஆனால் கிரவுண்டுல இல்லையாம்.. அப்போ எங்க?

2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் பல திறமையான இளம் வீரர்கள் தோன்றினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தைச் சேர்ந்த 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், சீசன் முழுவதும் தனது அபாரமான வேகத்துடன் பந்துவீசி எதிரணியினரை தாக்கினார். இந்த சீசன்ல் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்பில் கேப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20I தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் இடம் பெற்றார். டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி 20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை ​​ஜூன் 9 ஆம் தேதி இந்திய அணி சந்திக்கிறது.

Umran Malik Delivered World Fastest Ball beat Brett Lee Shoaib Akhtar

வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், இந்த வார தொடக்கத்தில் இந்திய அணியுடன் தனது பயிற்சியை தொடங்கினார், மேலும் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில், மாலிக் தனது ஐபிஎல் சீசன் மற்றும் இந்திய அழைப்பைப் பற்றி பேசியுள்ளார். அதில், "நான் இந்தியாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​டேல் சார் (ஸ்டெயின்) என்னுடன் டீம் பேருந்தில் இருந்தார். எல்லோரும் என்னை வாழ்த்தினார்கள், டேல் சார் சொன்னார், "ஐபிஎல் தொடருக்கு முன்பே உங்களுக்கு இந்தியா அழைப்பு வரும் என்று நான் சொன்னேன். சீசனுக்குப் பிறகு, அது நடந்ததுள்ளது, ஏக இறைவனின் அருளால், இப்போது டீம் இந்தியாவுக்காக எனது சிறந்ததை வழங்குவதே எனது இப்போதைய குறிக்கோள், ”என்று மாலிக் வீடியோவில் கூறுகிறார்.

Umran Malik Delivered World Fastest Ball beat Brett Lee Shoaib Akhtar

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருடனான தனது பயிற்சி பற்றியும் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் பேசினார். அதில், “ராகுலை சந்தித்து பேசியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் விளையாட்டின் ஒரு ஜாம்பவான். நான்ிப்போது செய்வதையே தொடரச் சொன்னார். பராஸ் சாரும் எனக்குப் பின்னால் நின்று ஒவ்வொரு பந்தின் போதும் அவர் என்னை வழிநடத்தினார். இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது,” என கூறுகிறார், உம்ரான் மாலிக்.

Umran Malik Delivered World Fastest Ball beat Brett Lee Shoaib Akhtar

பயிற்சியின் போது உம்ரான் மாலிக், 163.7 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால் இது பயிற்சி ஆட்டம் என்பதால் ஐசிசியின் அங்கீகாரம் கிடைக்காது.  இங்கிலாந்துக்கு எதிரான 2003 உலகக் கோப்பையில், 161.3 கிமீ (100.2 மைல்) வேகத்தில் பந்து வீசிய அக்தரின் பெயரே தற்போது முதல் இடத்தில் உள்ளது.  அதே போல பிரெட் லீ, நியூசிலாந்திற்கு எதிராக 2005 ஆம் ஆண்டு நேப்பியரில் நடந்த ODI ஆட்டத்தின் போது மிக வேகமாக பந்து வீசினார். பந்து வீச்சின் போது பதிவு செய்யப்பட்ட வேகம் 161.1 kmph (100.1mph) ஆகும்.

Also Read | இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் T20 போட்டிகள்.. சூடு பிடிக்கும் டிக்கெட் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா?

CRICKET, UMRAN MALIK, WORLD FASTEST BALL BEAT, BRETT LEE, SHOAIB AKHTAR

மற்ற செய்திகள்