அம்பயரை கதற விட்ட இந்திய அணி.. "உங்களால எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் யா.." பரபரப்பான மைதானம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்கா : இந்திய அணி வீரர்களின் செயலால், நொந்து போன அம்பயர் கூறிய வார்த்தை ஒன்று, ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி, வைரலாகி வருகிறது.

அம்பயரை கதற விட்ட இந்திய அணி.. "உங்களால எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் யா.." பரபரப்பான மைதானம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்க அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்க, அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள் தேவைப்படுகிறது. இன்னும் 2 நாட்கள் மீதம் இருப்பதால், தென்னாப்பிரிக்க அணியின் கையே அதிகம் ஓங்கியிருக்கிறது.

VIDEO: ‘வாயை மூடிட்டு நில்லுய்யா’!.. தேவையில்லாமல் வாயைக் கொடுத்து ‘பல்பு’ வாங்கிய பந்த்..!

விறுவிறுப்பு

அதே போல, இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், சில விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், இன்றைய நாள் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் போராடும் என்பதால், நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Umpire erasmus said you guys giving heart attack to indian team

எழுந்த சர்ச்சைகள்

முன்னதாக, இந்த போட்டியில், பல விதமான பரபரப்பு மற்றும் சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறியிருந்தது. இந்திய கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங் செய்த போது, நடுவரின் வார்னிங்கை பெற்றிருந்தார். அதே போல, தென்னாப்பிரிக்க  வீரர் வெண்டர் டுசன் முதல் இன்னிங்ஸில் அவுட் ஆனது, அதிகம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

முட்டி மோதிய வீரர்கள்

Umpire erasmus said you guys giving heart attack to indian team

இதற்கு காரணம், இவரது விக்கெட்டிற்காக ரிஷப் பண்ட் பிடித்த கேட்ச், தரையில் பட்டது போல தோன்றியது தான்.  இதனை அப்பீல் கூட செய்யாமல், வெண்டார் டுஷன், நடையைக் கட்டினார். பிறகு. ரீப்ளேயில், அவுட்டில்லை என்பது போன்றும் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய வீரர் கே எல் ராகுல், அவுட்டானதும் இதே போன்றதொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, ரிஷப் பண்ட் - வெண்டர் டுசன் விவகாரம், பும்ரா - மார்கோ ஜென்சன் சண்டை என மூன்றே நாள் போட்டியில், பல பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறியிருந்தது.

VIDEO: விட்டா அடிதடி ‘சண்டை’ ஆகிடும் போலயே.. பும்ராவை வம்புக்கு இழுத்த தென் ஆப்பிரிக்க பவுலர்.. ஓடி வந்து தடுத்த அம்பயர்..!

Umpire erasmus said you guys giving heart attack to indian team

பதறிய நடுவர்

இதற்கு மத்தியில் போட்டி நடுவர், இந்திய அணி குறித்து கூறியுள்ள கருத்து ஒன்று, ஸ்டம்ப் மைக்கில் பதிவான நிலையில், அதிகம் வைரலாகி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 10 ஆவது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில், மார்க்ரம் அவுட்டானார்.

Umpire erasmus said you guys giving heart attack to indian team

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அப்படி என்ன அவசரம்? அரசியல் உள்நோக்கமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

ஹார்ட் அட்டாக்கே வந்துரும்

ஆனால், இதற்கு முன்பாக, ஷர்துல் தாக்கூர், இரண்டு முறை மிகவும் ஆக்ரோஷமான முறையில், எல்பிடபுள்யூ அவுட்டிற்காக நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால், நடுவர் அவுட் எதுவும் கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கடைசி பந்தில் மார்க்ரம் அவுட்டாக, ஒவர் முடிவடைந்த நிலையில், நடுவராக இருந்த எராஸ்மாஸ், இந்திய அணியினரிடம், 'ஒவ்வொரு ஓவரின் போதும், எனக்கு ஹார்ட் அட்டாக் வரும் படி, நீங்கள் நடந்து கொள்கின்றனர்' என தெரிவித்துள்ளார்.

VIDEO: ‘வாயை மூடிட்டு நில்லுய்யா’!.. தேவையில்லாமல் வாயைக் கொடுத்து ‘பல்பு’ வாங்கிய பந்த்..!

 

Umpire erasmus said you guys giving heart attack to indian team

இது தொடர்பான ஆடியோ, ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

UMPIRE ERASMUS, HEART ATTACK, INDIAN TEAM, அம்பயர், இந்திய அணி

மற்ற செய்திகள்