ரஷ்யா - உக்ரேன் வீராங்கனைகளுக்கு இடையே நடந்த டென்னிஸ் மேட்ச்.. பரபரப்பான மைதானம்.. கடைசியில நடந்த சர்ச்சை சம்பவம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரஷ்யா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையுடன் உக்ரைன் வீராங்கனை கைகுலுக்க மறுத்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

ரஷ்யா - உக்ரேன் வீராங்கனைகளுக்கு இடையே நடந்த டென்னிஸ் மேட்ச்.. பரபரப்பான மைதானம்.. கடைசியில நடந்த சர்ச்சை சம்பவம்.. வீடியோ..!

                     Images are subject to © copyright to their respective owners.

ATX ஓபன்

அமெரிக்காவில் வைத்து ATX ஓபன் தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் வர்வாரா கிரச்சேவா மற்றும் உக்ரைன் நாட்டின் மார்தா கோஸ்ட்யுக் பலப்பரீட்சை நடத்தினர். ஆரம்பம் முதலே பரபரப்புடன் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்? என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த போட்டியில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் உக்ரைன் நாட்டின் மார்தா கோஸ்ட்யுக் வெற்றிபெற்று கோப்பையை வென்றார்.

Images are subject to © copyright to their respective owners.

அர்ப்பணிப்பு

தொடரில் வென்று கோப்பையை கைப்பற்றிய மார்தா கோஸ்ட்யுக் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். அப்போது,"நான் இப்போது இருக்கும் நிலையில் இந்த பட்டத்தை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பட்டத்தை உக்ரைனுக்கும், தற்போது போராடி இறக்கும் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்" என தெரிவித்திருந்தார்.

சர்ச்சை சம்பவம்

போட்டியின் முடிவின்போது, வழக்கமாக இரு வீரர்களும் கைகுலுக்கி கொள்வது வழக்கம். ஆனால்,  மார்தா ரஷ்ய வீராங்கனை வர்வாரா கிரச்சேவாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். நடுவரிடம் மட்டுமே அவர் கைகுலுக்க அரங்கமே சற்றுநேரம் இதன் காரணமாக பரபரப்பானது. 

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளை ATX ஓபன் தொடரில் பங்கேற்க அனுமதித்தது குறித்து மார்தா விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவர் கோப்பையை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை சேர்ந்த வீரர்கள் விம்பிள்டன் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் இருநாட்டு வீரர்களை அனுமதிப்பதா? என்பது குறித்து LTA மற்றும் AELTC ஆகியவை ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

UKRAINE, MARTA KOSTYUK, TENNIS

மற்ற செய்திகள்