'இதுவரைக்கும் நல்லா போய்கிட்டு இருந்துச்சு...' 'தொடர்ச்சியா அடிக்கு மேல அடியா விழுது...' - ஆர்சிபி டீம்-க்கு மேலும் ஒரு சோகம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் இந்திய வீரர்களும் தொடரில் இருந்து வெளியாகி வருகின்றனர்.

'இதுவரைக்கும் நல்லா போய்கிட்டு இருந்துச்சு...' 'தொடர்ச்சியா அடிக்கு மேல அடியா விழுது...' - ஆர்சிபி டீம்-க்கு மேலும் ஒரு சோகம்...!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் புயல் காற்றை போல சுழன்று வருகிறது. அதோடு தற்போது நடைபெற்று வரும் ஐபில் தொடரிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல வீரர்கள் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து விலகி வருகின்றனர்.

தற்போது வரை 2012ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் முடிந்துள்ளது. இன்னும் ஒரு சுற்றுப்போட்டிகள், ப்ளேஆஃப், எலிமினேட்டர் சுற்று, இறுதிப்போட்டி இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை பார்த்து பல வீரர்கள் பீதியில் உள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள்.

விராட் கோலி கேப்டனாக இருக்கும் ஆர்.சி.பி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சார்ட்ஸன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை  போன்றோர் விலகியுள்ளனர்.

ஆர்சிபி அணியில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஸம்பா, கேன் ரிச்சார்ட்ஸன் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதோடு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வினும் ஐபில் தொடரிலிருந்து விலகுவதாக நேற்று அறிவி்த்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை போட்டியில் இருந்து விலகுவதாகவும், அதற்கான காரணத்தையும் ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார்

அதில், 'இந்தியாவில் கொரோனா பாதித்து வரும் பலர் ஆஸ்திரேலியாவில் உள்ள என்னுடைய சொந்த மாநிலமான பெர்த் நகரில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய சூழல் இப்படியே நீடித்தால் இந்தியாவிலிருந்து வருவதற்கு கூட தடை விதிக்கலாம். அது எனக்கு இன்னும் கவலையை ஏற்படுத்தும். என்னுடைய நாடும் இந்தியாவிலிருந்து வருவோருக்கு தடைவிதிக்கும் முன் நான் புறப்பட வேண்டிய தேவை உள்ளது, அதனால் ஐபில் போட்டியில் இருந்து விலகுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை ஏலத்தில் ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்