“ஆமா.. அவங்க ரெண்டு பேர் விளையாட மாட்டாங்க”.. இன்னும் ஒரு நாள்ல CSK கூட மேட்ச்.. திடீர்னு KKR மென்டார் சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இரண்டு முக்கிய வீரர்கள் முதல் ஐந்து போட்டிகளை தவறு விட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இந்த சூழலில் மீண்டும் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு முதல் குஜராத், லக்னோ ஆகிய இரு அணிகள் இணைந்துள்ளதால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு ஐபிஎல் ஏலம் நடந்தது. அதனால் ஒவ்வொரு அணியிலும் ஏற்கனவே விளையாடிய வீரர்கள் பலர் மற்ற அணிகளுக்கு மாறியுள்ளனர்.
இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணிக்கும் ஆல்ரவுண்டர் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரின் முதல் ஐந்து போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அந்த அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்சி தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், ‘ஒவ்வொரு வீரருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விட தேசிய அணிக்காக விளையாடுவது தான் முக்கியம். தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதனால் அந்த தொடர் முடிவடைந்த பின்னற் பேட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்தியா வருவார்கள். அதனால் அவர்கள் இருவரும் முதல் ஐந்து போட்டிகளில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது’ என டேவிட் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் கொல்கத்தா அணிக்கு முக்கிய வீரர்களாக கருதப்பட்டனர். தற்போது இருவரும் விலகியுள்ளது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் முதல் போட்டியில் எதிர்கொள்ள உள்ள சிஎஸ்கே அணிக்கு சாதகமான விஷயமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்