'20 லட்சத்துக்கு' ஆசைப்பட்டு.. 'ஆமை' வேகத்துல பேட்டிங்.. பிரபல வீரர்கள் கைது!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 2 கிரிக்கெட் வீரர்களை கர்நாடக காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

'20 லட்சத்துக்கு' ஆசைப்பட்டு.. 'ஆமை' வேகத்துல பேட்டிங்.. பிரபல வீரர்கள் கைது!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றன. அப்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கர்நாடக கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் எழுந்தது. இதனை விசாரித்து வந்த கிரைம் போலீசார் இன்று காலை பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் ஜி.எம்.கவுதம், விக்கெட் கீப்பர் அப்ரார் காஸி இருவரையும் கைது செய்தனர்.

கர்நாடக பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் பெல்லாரி-ஹுபாலி அணிகள் மோதின. இதில் மெதுவாக பேட்டிங் செய்ய ரூ.20 லட்சத்தை இவர்கள் பரிசாக பெற்றதாகவும், மற்றொரு போட்டியின் முடிவை முன்பே தீர்மானிக்க இவர்கள் பணம் பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் சிலர் இதுதொடர்பாக கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ரஞ்சி வீரரான கவுதம் டெல்லி, மும்பை, பெங்களூர் அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.