"அந்த 'டீம்' நமக்கு வேணாம்,,.. நீ வேற 'டீம்'க்கு போயிடு 'சிவாஜி',,.." கிரிக்கெட் வீரருக்காக உருகிய 'நெட்டிசன்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
தொடர்ச்சியாக இரண்டாவது முறை மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடர்களிலேயே அசைக்க முடியாத அணியாக மும்பை அணி திகழ்ந்து வருகிறது. ஐந்தாவது முறையாக கோப்பையை வென்ற மும்பை அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடி வரும் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், மும்பை அணிக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் 'சந்தேகமே இல்லை. இந்த ஆண்டின் மிக சிறந்த அணி மும்பை தான்' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த டிவீட்டிற்கு கீழ் அவரது ரசிகர்கள் பலர், நீங்கள் வேறு அணிக்காக தயவு செய்து ஐபிஎல் தொடரில் ஆடுங்கள் என்றும், மும்பை அணிக்காக ஆடினால் நிச்சயம் கோப்பையை கைப்பற்றலாம் என்றும் உருக்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக ஆடி வரும் டிவில்லியர்ஸ், அனைத்து சீசன்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும், பெங்களூர் அணியிலுள்ள சில குறைகளால் அந்த அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்த ஆண்டும் பல போட்டிகளில் தனி மனிதனாக பெங்களூர் அணிக்காக போராடினார். ஆனாலும் மற்ற வீரர்கள் சொதப்புவதால், தொடர்ந்து தோல்விகளுடன் வெளியேறியது.
Well done @mipaltan ! Without a doubt the best team this year. https://t.co/j9N2ns3Ozs
— AB de Villiers (@ABdeVilliers17) November 10, 2020
YOU DESERVE A BETTER TEAM AB https://t.co/hzIOHV4Oc6
— mi fan (@mifan09505076) November 10, 2020
Please come to Mumbai sir, thats the only you lift the trophy 🥰#OneFamily @mipaltan #MumbaiIndians https://t.co/QuQvVtlvvG
— உண்மை மனிதன் (@Unmai_Manidhan) November 11, 2020
Love you superman come to Mumbai Indians 💙 pic.twitter.com/SR4pkZjYs8
— R A T N I S H (@LoyalSachinFan) November 10, 2020
King, plz leave current team
— Prithvi (@The_BeardMan_) November 10, 2020
Hey GOAT, please change your team.. move to @rajasthanroyals or @DelhiCapitals or @KKRiders or @SunRisers or any other new team if there's any new team is going to be added for next #IPL ... @RCBTweets & @imVkohli are wasting your time & efforts..
We're with you✊.
— Liked, Retweeted, Quoted and commented... (@JackDupe) November 11, 2020
இதை குறிப்பிட்டுத் தான் ரசிகர்கள் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்