‘என்ன ஆச்சு..?’.. தோனியின் ட்விட்டர் அக்கவுண்ட்டை கவனிச்சீங்களா..? இந்த திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐசிசி நடத்தும் இந்த 3 தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் தோனிதான்.
இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். தோனி இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக தோனி விளையாடி வருகிறார். இவர் தலைமையில் விளையாடி வரும் சிஎஸ்கே அணி 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தோனியின் ட்விட்டர் பக்கத்தில் வெரிஃபைடு அக்கவுண்ட் என்பதற்கான ப்ளூடிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இந்த தோனி, படிப்படியாக அதனை குறைத்துக் கொண்டார். எப்போதாவது தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோ, செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வீடியோ போன்றவற்றை பதிவிடுவார். ஆனால் அதையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் பதிவிட்டு வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை கூட இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுதான் தோனி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நீண்ட நாள்களாக ட்வீட் ஏதும் செய்யாததால் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தோனி ஒரு ட்வீட் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்