‘அபார திறமையே இருந்தாலும் இது ரொம்ப முக்கியம் பாஸ்’!.. 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் ‘மிஸ்ஸான’ இளம்வீரர் பெயர்.. ரசிகர்கள் விமர்சனம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்படாதது குறித்து இணையத்தில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

‘அபார திறமையே இருந்தாலும் இது ரொம்ப முக்கியம் பாஸ்’!.. 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் ‘மிஸ்ஸான’ இளம்வீரர் பெயர்.. ரசிகர்கள் விமர்சனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

Twitter reacts to Mayank Agarwal’s exclusion from India’s 15-man squad

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் இடபெற்றிருந்தனர். ஆனால் மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுலின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

Twitter reacts to Mayank Agarwal’s exclusion from India’s 15-man squad

இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 1052 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 243 ரன்கள். அந்த வகையில், இந்த வருட தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

Twitter reacts to Mayank Agarwal’s exclusion from India’s 15-man squad

ஆனால் அப்போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான திறமை இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அணியில் தொடர்ந்து இடம் கிடைப்பது கடினம்தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்