ஜடேஜாவை இரட்டை சதம் அடிக்க விடாமல் 'டிக்ளர்' சதி செய்தாரா ரோகித் ஷர்மா? டிவிட்டரில் கொந்தளித்த கிரிக்கெட் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமொஹாலி: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மாவின் டிக்ளர் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் 2022 மார்ச் 4 முதல் 8 வரையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி இன்று களமிறங்கி உள்ளது. ரோஹித் ஷர்மாவின் தலைமையில் டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, டெஸ்ட் தொடரிலும் வெற்றியின் வேகத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் காலையில் தொடங்கியது. 160 பந்துகளில் தன்னுடைய 2வது டெஸ்ட் சதத்தை ஜடேஜா பூர்த்தி செய்தார். பின் வழக்கம் போல் தனது பேட்டை வாள் போல சுழற்றி ராஜ்புட் ஸ்டைலில் கொண்டாடினார். ஜடேஜா மற்றும் அஷ்வின் 130 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 99 ரன்னில் இருந்த போது அஸ்வின் 82 பந்தில் 61 ரன்களில் கேட்ச் ஆகி அவுட்டானார்.
பின் ஜெயந்த் யாத்வ் விரைவில் அவுட் ஆக, சமியுடன் ஜோடி சேர்ந்து 175 ரன்கள் வரை ஜடேஜா அடித்தார். 200 ரன் அடித்து இரட்டை சதத்தை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த பொழுது, ரோகித் திடிரென டிக்ளர் செய்தது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இதே போல் 2004ல் பாகிஸ்தானுக்கு எதிராக முல்தான் டெஸ்டில் டிராவிட் கேப்டனாக இருந்த பொழுது சச்சின் (194*) இரட்டை சதம் அடிக்கும் முன் டிக்ளர் செய்தது சர்ச்சையானது.
574/8 dec என இந்திய அணி ரன் எடுத்துள்ளது. 175 ரன்னில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் ஷமியுடன் (20*) ஆடியுள்ளார்.
மற்ற செய்திகள்