"அவர ஏங்க இன்னைக்கி 'டீம்'ல எடுக்கல??..." No.'1' ஆல் ரவுண்டருக்கு வந்த 'சோதனை'... கொந்தளித்த 'நெட்டிசன்'கள்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது.

"அவர ஏங்க இன்னைக்கி 'டீம்'ல எடுக்கல??..." No.'1' ஆல் ரவுண்டருக்கு வந்த 'சோதனை'... கொந்தளித்த 'நெட்டிசன்'கள்...

தொடர்ந்து இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி ஆடி வரும் நிலையில், வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் ஆர்ச்சர் ஓவரில் ஆட்டமிழந்தனர். இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி தொடர்ந்து விளையாடி வரும் நிலையில், இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வில்லியம்சனுக்கு பதிலாக ஜேசன் ஹோல்டரை அணியில் தேர்வு செய்தது.twitter reacts for srh not select nabi for playing xi vs rr

இதனால், ஹைதராபாத் அணி ரசிகர்கள் கடும் அதிருப்திக்குள் ஆகினர். காரணம், ஆப்கானிஸ்தான் அணி ஆல் ரவுண்டரான முகமது நபியை ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் ஹைதராபாத் களமிறக்கியது. ராஷித் கானுக்கு சமமாக அவர் பந்து வீசி, மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் நபியை ஏன் அணி இன்று களமிறக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுவரை வில்லியம்சன் அணியில் இடம்பெற்றிருந்ததால் நபிக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ஆனால், இன்றைய போட்டியில் காயம் காரணமாக வில்லியம்சன் இடம்பெறாத நிலையில், அவருக்கு பதிலாக நபி தான் அணியில் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

 

ஆனால் ஹோல்டரை அணியில் ஆடச் செய்தார் வார்னர். இதனால் ரசிகர்கள் நபிக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டி 20 போட்டிகளில் மிகச் சிறந்த வீரரான நபியை ஏன் இன்னும் சரிவர பயன்படுத்தமால் ஹைதராபாத் அணி இருக்கிறது என்ற கேள்வியை ரசிகர்கள் அதிகம் முன் வைக்கின்றனர். 

 

 

மற்ற செய்திகள்