"அப்படி என்ன தப்ப அவரு பண்ணிட்டாருன்னு.. இப்டி ஒரு முடிவ எடுத்து வெச்சுருக்கீங்க??.." கொதித்து எழுந்த 'ரசிகர்கள்'.. 'பரபர' பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனில், இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

"அப்படி என்ன தப்ப அவரு பண்ணிட்டாருன்னு.. இப்டி ஒரு முடிவ எடுத்து வெச்சுருக்கீங்க??.." கொதித்து எழுந்த 'ரசிகர்கள்'.. 'பரபர' பின்னணி!!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வரும் டேவிட் வார்னர் (David Warner), அந்த அணிக்காக, 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். அதே போல, 2016 ஆம் ஆண்டு முதல், கடந்த சீசன் வரை, ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.

மேலும், வார்னர் இல்லாத 2018 ஆம் ஆண்டு, வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, இரண்டாவது இடமும் பிடித்து அசத்தியது. ஆனால், இந்த சீசனில் ஹைதராபாத் அணியின் மோசமான ஆட்டம் காரணமாக, தற்போது ஹைதராபாத் அணி நிர்வாகம், வார்னரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

இதுகுறித்து, ஹைதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நடைபெறும் போட்டியில் இருந்து, ஹைதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் (Kane Williamson) தொடர்வார் என்றும், வெளிநாட்டு வீரர்களின் தேர்வை மாற்றி அமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், அந்த அணியின் மிடில் ஆர்டர்கள் தான் கடுமையாக சொதப்பி வருகிறது. இது தான், இந்த சீசனில் ஹைதராபாத் அணியின் மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. எப்போதும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படும் வார்னர், இந்த சீசனில் மிகவும் சோர்வுடனே காணப்பட்டார்.

இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த வார்னரை, ஐபிஎல் தொடரின் பாதியில், கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கியுள்ளதால், அவரது ரசிகர்கள் அதிகம் கடுப்பாகியுள்ளனர்.

 

இதன் காரணமாக, வார்னருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்