Video : "முக்கியமான நேரத்துல இப்படியா பண்ணுவீங்க??.." 'இந்திய' வீரர்கள் செஞ்ச அந்த ஒரு 'mistake'... மொத்த மேட்சையும் மாத்திடுச்சு... கடுப்பான 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே இன்று நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Video : "முக்கியமான நேரத்துல இப்படியா பண்ணுவீங்க??.." 'இந்திய' வீரர்கள் செஞ்ச அந்த ஒரு 'mistake'... மொத்த மேட்சையும் மாத்திடுச்சு... கடுப்பான 'ரசிகர்கள்'!!

அது மட்டுமில்லாமல், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என்ற கணக்கில் தற்போது முன்னிலையும் வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், கேப்டன் கோலி மட்டும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தார். தொடக்கத்தில், சற்று பொறுமை காட்டிய கோலி, இறுதியில் அதிரடியாக ஆடி, ரன்களை குவித்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 77 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில், ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 83 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெறவும் உதவினார்.

இதனிடையே, இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, தொடக்க விக்கெட்டுகள் வேகமாக விழுந்த போது, கோலி மற்றும் ரிஷப் பண்ட் இணை, சிறப்பாக ஆடி கொண்டிருந்தது. அப்போது, தேவையே இல்லாமல் இந்திய அணிக்கு பறிபோன விக்கெட், மொத்த போட்டியையும் மாற்றி அமைத்து விட்டது. 12 ஆவது ஓவரை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரான் வீசிய போது, பந்தை எதிர்கொண்ட ரிஷப் பண்ட், அதனை ஆப் சைட் திசையில் அடித்தார்.

தொடர்ந்து, கோலி மற்றும் பண்ட் ஆகியோர் இரண்டு ரன்களை வேகமாக ஓடி எடுத்த நிலையில், ஃபீல்டர் வீசிய பந்து, கீப்பர் பட்லர் கையிலிருந்து நழுவிச் சென்றது. சற்று அருகே தான் பந்து சென்றாலும், வேகமாக ரன் ஓடி எடுத்து விடலாம் என கோலி, பண்ட்டை அழைத்தார். இதனால், மூன்றாவது ரன்னுக்கு இருவரும் வேகமாக ஓடிய போது, பட்லர் மற்றும் சாம் குர்ரான் ஆகியோரால், பண்ட் ரன் அவுட் செய்யப்பட்டார்.

சிறப்பாக சென்று கொண்டிருந்த பார்ட்னர்ஷிப்பில், திடீரென பேட்ஸ்மேன்கள் செய்த தவறால் விக்கெட்டை பறிகொடுக்க வேண்டி வந்ததால், ரசிகர்கள் அதிகம் கடுப்பில் உள்ளனர். இது தொடர்பாக, தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த தவறை செய்யாமல் அவர்கள் ஆகியிருந்தால், இன்னும் கொஞ்ச ரன்களை அடித்து இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்வும் அவர்கள் கூறி வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்