'ஐபிஎல் கோப்பையை ஜெயிச்சே ஆகணும்’... ‘பழைய பயிற்சியாளரையே நியமித்து’... ‘இப்பவே அதிரடி மாற்றத்திற்கு தயார் ஆன ஐபிஎல் அணி’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2021 ஐபிஎல் தொடரை மனதில் வைத்து தற்போது முதலே முக்கிய மாற்றத்தை செய்து வருகிறது.

'ஐபிஎல் கோப்பையை ஜெயிச்சே ஆகணும்’... ‘பழைய பயிற்சியாளரையே நியமித்து’... ‘இப்பவே அதிரடி மாற்றத்திற்கு தயார் ஆன ஐபிஎல் அணி’...!!!

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை அடுத்து வெற்றிகரமான ஐபிஎல் அணி என்றால் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான். அந்த அணி 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிளே ஆஃப் முன்னேறி உள்ளது. 2016 முதல் 2019 வரை அந்த அணியை 4 முறை பிளே ஆஃப் முன்னேற வைத்துக் காட்டினார் அப்போதைய பயிற்சியாளர் டாம் மூடி.

இதனால் ஒரு முறை கோப்பையும் வென்றது அந்த அணி. இத்தனைக்கும் அணியில் கேப்டன் இல்லை, நல்ல பந்துவீச்சாளர் இல்லை, நட்சத்திர வீரர் இல்லை என ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் பதறாமல் அதை சமாளித்து வந்தார். இதற்கிடையில் 2019 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாததை அடுத்து அவர் பதவி விலகினார்.

Tom Moody returns to SRH, this time as Director of Cricket

அப்போது உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ்-ஐ பயிற்சியாளராக நியமித்தது ஹைதராபாத் அணி. 2020 ஐபிஎல் தொடரிலும் பிளே ஆஃப் வரை முன்னேறினாலும் இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் அணி முன்னேறவில்லை. இந்நிலையில் தங்களின் பழைய பயிற்சியாளரான டாம் மூடியை மீண்டும் அணியில் சேர்த்து அணிக்கு வழிகாட்டுமாறு அழைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம்.

ட்ரெவர் பேலிஸ் பயிற்சியாளராக தொடரும் நிலையில், டாம் மூடியை அணியின் கிரிக்கெட் இயக்குனராக நியமித்துள்ளது அணி நிர்வாகம். ஏற்கனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் கிரிக்கெட் இயக்குனர் என்ற பதவி உள்ளது. அதே போல, ஹைதராபாத் அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்