'கங்குலியின் பிளானுக்கு எழுந்த அடுத்தடுத்த சிக்கல்?!!'... 'மெகா Auction இருக்கா, இல்லையா???'... 'புது பிளான் போடும் பிசிசிஐ!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021 தொடரில் இரண்டு புதிய ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்ய சவுரவ் கங்குலி திட்டமிட்டு வருவதாக முன்னதாக தகவல் வெளியானது.
இந்தாண்டு ஐபிஎல் சீசன் வெற்றியை தொடர்ந்து 2021 தொடரில் இரண்டு புதிய ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்து அதன்மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம் என சவுரவ் கங்குலி திட்டமிட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், அஹமதாபாத்தை மையமாக கொண்டு ஒரு அணியும், லக்னோ அல்லது கான்பூரை வைத்து மற்றொரு ஐபிஎல் அணியும் உருவாகலாம் எனவும் தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி டிசம்பர் இறுதியில் நடைபெற உள்ள பிசிசிஐ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருந்த நிலையில், தற்போது அது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே இந்த தொடரை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற ஒரு இக்கட்டான சூழலில் புதிய அணிகளை அவசரகதியில் அறிமுகம் செய்தால் நிறைய தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இரண்டு அணிகள் அறிமுகம் செய்யப்பட்டால் மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும் என்பதால், அதற்கு கால அவகாசம் குறைவாகவே உள்ள நிலையில் மெகா ஏலத்துக்கு பின் ஐபிஎல் அணிகள் புதிய வீரர்களைக் கொண்டு திட்டம் தீட்டக் கூட நேரம் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக ஐபிஎல் அணிகளின் தயார்நிலை வெகுவாக பாதிக்கப்படும் என்பதால் ஏற்கனவே உள்ள ஐபிஎல் அணிகளைக் கொண்டே தொடரை நடத்தலாமென பிசிசிஐ முடிவு எடுக்குமென சில அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேநேரம் இதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. 2021 ஐபிஎல் தொடருடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான ஒளிபரப்பு ஒப்பந்தம் நிறைவடைவதால் 2022 ஐபிஎல் தொடரில் புதிய ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்து புதிய ஒப்பந்தத்தில் அதிக தொகையை பெற முயற்சி செய்தால், அது பிசிசிஐக்கு மிகவும் லாபகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பிசிசிஐ கூட்டத்தில் நிச்சயமாக புதிய ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்ய ஒப்புதல் கிடைக்காது எனவும், 2021 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்