‘இதுக்கெல்லாம் ரொம்ப பெரிய மனசு வேணும்’!.. நியூஸிலாந்து வீரர் செஞ்ச காரியம்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சைக்காக நியூஸிலாந்து வீரர் டிம் சவுத்தி செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

‘இதுக்கெல்லாம் ரொம்ப பெரிய மனசு வேணும்’!.. நியூஸிலாந்து வீரர் செஞ்ச காரியம்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

கடந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இதுவரை ஐசிசி நடத்திய கிரிக்கெட் தொடர்களில் ஒருமுறை கூட நியூஸிலாந்து அணி கோப்பையை வென்றதில்லை. அரையிறுதி, இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியே தழுவியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை தொடரிலும், இறுதிப்போட்டி வரை வந்து இங்கிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்தது.

Tim Southee auction WTC final jersey to save 8-year-old girl

தற்போது ஐசிசி முதல்முறையாக நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் அணியாக கோப்பையை கைப்பற்றி நியூஸிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது. இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்ளிட்ட வீரர்கள் நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Tim Southee auction WTC final jersey to save 8-year-old girl

இந்த நிலையில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாரட்டை பெற்று வருகிறது. நியூஸிலாந்தை சேர்ந்த ஹோலி பேட்டி என்ற 8 வயது சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு உதவ முன்வந்த டிம் சவுத்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தான் அணிந்திருந்த ஜெர்சியை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார்.

Tim Southee auction WTC final jersey to save 8-year-old girl

இதனால் தனது ஜெர்சியில் நியூஸிலாந்து வீரர்கள் அனைவரும் ஆட்டோகிராஃப் போட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிம் சவுத்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘எனது குடும்பத்தினருக்கு முதலில் ஹோலியின் கதை பற்றி தெரியவந்தது. சிறுமியின் கதையை கேட்டு நான் மிகுந்த வேதனையடைந்தேன். ஹோலிக்கு இன்னும் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுவதால் எனது ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளேன். நேரடியாக உதவ விரும்புபவர்கள், வங்கிக்கணக்கு மூலம் உதவி செய்யுங்கள்’ என டிம் சவுத்தி குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கோப்பைக்கு இணையாக கருதப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அணிந்திருந்த ஜெர்சி வீரர்களின் மனது நெருக்கமானதாக இருக்கும். அதனை 8 வயது சிறுமியின் சிகிச்சைக்காக டிம் சவுத்தி ஏலத்தில் விட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே குழந்தைக்காக கடந்த ஆண்டு நியூஸிலாந்து பேட்ஸ்மேன் மார்டின் கப்தில் தனது பேட்டை ஏலத்தில் விட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்