“கோலாகலமாக நடந்த விழா”!... உயரிய விருது பெற்ற பிரபல கோல்ஃப் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதை பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் பெற்றுள்ளார்.

“கோலாகலமாக நடந்த விழா”!... உயரிய விருது பெற்ற பிரபல கோல்ஃப் வீரர்!

கோல்ஃப் விளையாட்டில் சர்வதேச அளவில் பிரபலமாக திகழ்பவர் டைகர் உட்ஸ். 43 வயதாகும் உட்ஸ் பல காயங்களுக்கு பின் மீண்டும் விளையாட திரும்பியுள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற மாஸ்டர்ஸ் கோல்ஃப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், 11 ஆண்டுகள் கழித்து மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியனாகியுள்ளார்.

இதனையடுத்து, டைகருக்கு அமெரிக்காவின் உயரிய விருதாக கருதப்படும் அதிபரின் பதக்கத்தை (Presidential Medal of Freedom) வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். மேலும், டைகர் உட்ஸ் சிறந்த மனிதர் என்றும் சர்வதேச அளவில் அமெரிக்காவின் திறமைக்கு அடையாளமாக இருப்பவர் என்றும்  அதிபர் ட்ரெம்ப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள ரோஜா தோட்டத்தில் நேற்று (06/05/2019) இந்த விருது விழா நடைபெற்றது. இதில் டைகர் உட்ஸின் தாயார், இரு பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பின்னர், விழாவில் பேசிய உட்ஸ், தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், “இது ஒரு நம்பமுடியாத அனுபவம்.” எனவும் கூறியுள்ளார்.

DONALD TRUMP, TIGERWOODS, AWARD, UNITED STATES