Vinod Kambli : “சமையல் பாத்திரத்தால் அடிச்சு.. தகாத வார்த்தையில திட்டி..” .. மனைவியை தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி ..? பரபரப்பு குற்றச்சாட்டு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

1990களில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடிய வீரர்களில் இருந்து மிகவும் நினைவுகூரப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் வினோத் காம்ப்ளி.

Vinod Kambli : “சமையல் பாத்திரத்தால் அடிச்சு.. தகாத வார்த்தையில திட்டி..” .. மனைவியை தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி ..? பரபரப்பு குற்றச்சாட்டு..!

Images are subject to © copyright to their respective owners

புகழ்பெற்ற பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்ற திறமையான கிரிக்கெட் வீரர்களில் காம்ப்ளியும் ஒருவர்.

சச்சின் டெண்டுல்கரும் காம்ப்ளியும் பள்ளி நாட்களில் செயின்ட் சேவியர்ஸ் பள்ளிக்கு எதிராக தங்கள் சாரதா ஆசிரம பள்ளிக்காக பார்ட்னர்ஷிப்பில் 664 ரன்கள் சேர்த்த பிறகு மும்பை முழுவதும் பிரபலமானார்கள்.

Threw broken handle of Pan Vinod Kambli wife accuses him

Images are subject to © copyright to their respective owners

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது ரஞ்சிக் கோப்பை வாழ்க்கையைத் தொடங்கினார் காம்ப்ளி. அவர் முறையே 1991 மற்றும் 1992 இல் சர்வதேச ஒரு நாள்  & டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த 1992 உலகக் கோப்பையிலும் வினோத் காம்ப்ளி பங்கேற்றார்.

1993 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் இங்கிலாந்துக்கு எதிராக 103 ரன்கள் எடுத்த போது, ​​தனது பிறந்தநாளில் ஒருநாள் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.

1993 இல் மும்பை வான்கடேவில் இங்கிலாந்துக்கு எதிராக 224 ரன்களையும், ​​பின்னர் தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்களையும் எடுத்தபோது, ​​தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை காம்ப்ளி படைத்தார்.

இருப்பினும், அவர் 25 வயதை அடைவதற்கு முன்பே அவரது டெஸ்ட் வாழ்க்கை முடிந்துவிட்டது.  இறுதியாக 17 போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 3 அரை சதங்களுடன் 1084 ரன்கள் எடுத்தார்.

கான்பூரில் ஜிம்பாப்வேக்கு எதிராக 1996 உலகக் கோப்பையில் பங்கேற்று, இந்தியாவுக்காக ODI கிரிக்கெட் விளையாடினார். காம்ப்ளி கடைசியாக 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவுக்காக விளையாடினார். இறுதியாக 104 போட்டிகளில் 2 சதம் மற்றும் 14 அரை சதங்களுடன் 2477 ரன்களை குவித்தார்.

அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் வினோத் காம்ப்ளி மீது

அவரின் மனைவி ஆண்ட்ரியா, தன்னை வார்த்தைகளால் திட்டி சமையல் பாத்திரத்தால் வினோத் காம்ப்ளி தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மும்பையில் உள்ள பாந்த்ரா காவல்நிலையத்தில், குடிபோதையில் தனது மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தியதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனைவி ஆண்ட்ரியா ஹெவிட், தனது புகாரில், "வினோத் காம்ப்ளி, தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தாக்கியதாகவும்" குற்றம் சாட்டியுள்ளார்.

ஆண்ட்ரியா ஹெவிட்டின் புகாரின் அடிப்படையில், பாந்த்ரா போலீஸார்  காம்ப்ளிக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரிவுகள் 324 (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு)  ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தலையில் காயமடைந்த ஆண்ட்ரியாவை பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக பாபா மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

VINOD KAMBLI

மற்ற செய்திகள்