"இந்த 'டீம்' ஜெயிக்கத் தான் 'சான்ஸ்' அதிகமா??... ஃபைனல் 'மேட்ச்'க்கு முன்னாடியே அடித்துச் செல்லும் 'ரிப்போர்ட்'!!!,,. ஒருவேள இருக்குமோ??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.
இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியுள்ள மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. மற்றொரு அணியான டெல்லி, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிரான 3 போட்டிகளிலும் தோல்வியையே தழுவியிருந்தது.
அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையிலான ஆட்டத்தை டெல்லி அணி நிச்சயம் வெளிப்படுத்த முயற்சிக்கும். இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு என்பதால் மூன்று விஷயங்கள் டெல்லி அணி கோப்பையை கைப்பற்றுவதை கணிப்பதாக உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் லீப் (Leap) ஆண்டில் புதிய அணியே கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2008 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணியும், 2012 இல் கொல்கத்தா அணியும், 2016 இல் ஹைதராபாத் அணியும் கோப்பையை கைப்பற்றியிருந்தது.
அடுத்ததாக, மும்பை அணி இதுவரை 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், Even ஆண்டில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதில்லை. மூன்றாவதாக, ரோஹித் ஷர்மா பங்குபெற்றுள்ள டி 20 அணியும் Even ஆண்டில் கோப்பையை கைப்பற்றியதில்லை.
நான்கு முறை மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா கோப்பையை வென்றுள்ள நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு கில்க்றிஸ்ட் தலைமையிலான ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றிய போது அந்த அணியில் ரோஹித் இடம்பெற்றிருந்தார்.
ஐபிஎல் மட்டுமில்லாது ரோஹித் இந்திய டி 20 உலக கோப்பை அணியில் 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த நிலையில், இந்திய அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து, 2014 என்ற even ஆண்டில் இந்திய டி 20 உலக கோப்பை அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்த நிலையில், இறுதி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி பெற்றிருந்தது.
இப்படி டெல்லி அணிக்கு சில தொடர்ச்சியாக சில காரியங்கள் சாதகமாக உள்ள நிலையில், டெல்லி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்