'இத ரன் அவுட்னு சொல்றதா.. நாட் அவுட்னு சொல்றதா.. என்னனு சொல்றது'?.. சச்சினின் வேற லெவல் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பைக்கு பிறகு ரன் - அவுட் என்பது விவாதப் பொருளாகவே மாறிவிட்டது. அந்த வார்த்தைக்கு அவ்வளவு முக்கியத்துவம் வந்ததற்கு காரணம் அரையிறுதியில் மோதிக்கொண்ட இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும், இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்ட நியூஸிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும்தான்.
அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு கிரிக்கெட் போட்டியில் நிகழும் வித்தியாசமான ரன் - அவுட் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் பேட்ஸ்மேன் பந்தை நோக்கி அடிக்க முயல, ஆனால் பந்து ஸ்டெம்பில் பட்டு செல்கிறது. எனினும் அந்த காட்சியை பார்த்தால் ரன் -அவுட் என்று சொல்வதா? இல்லை என்று சொல்வதா? என்கிற குழப்பம் தொற்றிக்கொள்கிறது.
அதில் சிலர், பேட்ஸ்மேன் இதற்கு முன்னர் எத்தனை பவுண்டரி அடித்துள்ளார் என்றும் இன்னொருவர் இங்கு ரன் - அவுட்டா என்பதை, ரன் அவுட் ஆன அணி எந்த அணி என்பதை வைத்துதான் சொல்ல முடியும். இங்கிலாந்து அணி பேட்டிங்கில் இருந்தால் நாட்-அவுட், நியூஸிலாந்து அணி பேட்டிங்கில் இருந்தால் அவுட் என்றெல்லாம் ஏகபோகத்துக்கும் கமெண்டுகள் இட்டு கலாய்த்துள்ளனர்.
இந்த வீடியோவும், சச்சினின் ட்வீட்டும் தற்போது வைரலாகி வருகின்றன.
A friend shared this video with me.
Found it very unusual!
What would your decision be if you were the umpire? 🤔 pic.twitter.com/tJCtykEDL9
— Sachin Tendulkar (@sachin_rt) July 24, 2019