‘வோர்ல்டு கப்புக்கு பிறகு’.. ‘தோனியைப் பார்க்கவே இல்லை’.. ‘இதுதான் அவருடைய எதிர்காலம்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் குறித்து தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

‘வோர்ல்டு கப்புக்கு பிறகு’.. ‘தோனியைப் பார்க்கவே இல்லை’.. ‘இதுதான் அவருடைய எதிர்காலம்’..

இந்திய அணிக்கு 3 விதமான போட்டிகளிலும் உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ள மகேந்திரசிங் தோனி உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. ராணுவ பயிற்சி காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெறாத தோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் இடம்பெறவில்லை.

தோனி ஆர்வம் காட்டாததே அணியில் இடம் பெறாததற்குக் காரணம் என தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்த நிலையில், அவர் ஓய்வு பெறப்போவதாக பல்வேறு வதந்திகள் வந்தன. இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ரவிசாஸ்திரி தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தோனியின் ஓய்வு குறித்துப் பேசியுள்ள அவர், “தோனி இந்திய அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக எப்போதுமே இருப்பார். அணிக்குத் திரும்புவது குறித்து தோனி தான் முடிவு செய்ய வேண்டும். உலகக் கோப்பை தொடருக்குப்பின் நான் அவரை சந்திக்கவே இல்லை. முதலில் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். அதன்பிறகு தான் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியும். தோனி விளையாட ஆர்வமாக இருந்தால் நிச்சயமாக தேர்வாளர்களுக்குத் தெரியப்படுத்துவார்” எனக் கூறியுள்ளர்.

TEAMINDIA, MSDHONI, RAVISHASTRI, WORLDCUP