என்னது, எலான் மஸ்க் 'ஐபிஎல்' மேட்ச் பார்க்குறாரா...? ஒரு 'ட்வீட்'னால குதூகலமான மேக்ஸ்வெல் ரசிகர்கள்...! - கடைசியில் தெரிய வந்த உண்மை...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் செய்த ட்வீட் ஒன்று ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னது, எலான் மஸ்க் 'ஐபிஎல்' மேட்ச் பார்க்குறாரா...? ஒரு 'ட்வீட்'னால குதூகலமான மேக்ஸ்வெல் ரசிகர்கள்...! - கடைசியில் தெரிய வந்த உண்மை...!

கிரிக்கெட் உலகில் அதிரடி பேட்டிங் செய்து தூள்கிளப்பி வருபவர் ஆஸ்திரேலிய அணியின் க்ளென் மேக்ஸ்வெல். ஆனால் இவரின் ஆட்டம் ஐபிஎல் போட்டிகளில் கணிக்க முடியாத அளவில் இருக்கும்.

Tesla CEO Elon Musk praise for Maxwell take Twitter by storm

சென்ற 2014-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 552 ரன்கள் எடுத்தவர், 2020 ஆம் ஆண்டு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும் ஐபிஎல் போட்டியில் அவரது ரசிகர்கள் அவரை வெறிகொண்டு பின்பற்றி வருகின்றனர்.

தற்போது 2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் எலான் மஸ்க், மேக்ஸ்வெல் குறித்து ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். ஆனால் அது எந்த மேக்ஸ்வெல் என்று தான் சமூக வலைத்தளத்தில் ஒரே குழப்பம்.

Tesla CEO Elon Musk praise for Maxwell take Twitter by storm

அதாவது, உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். அவர் தன் ட்விட்டரில் 'மேக்ஸ்வெல் வியக்கதகு மனிதராக இருந்தார்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

Tesla CEO Elon Musk praise for Maxwell take Twitter by storm

ஐபிஎல் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் எலான் மஸ்க்கின் இந்த ட்வீட்டரை பார்த்த ஆர்சிபி ரசிகர்களோ எலான் குறிப்பிட்டது க்ளென் மேக்ஸ்வெல்தான் என்று நினைத்துக் கொண்டு கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

அதோடு, எலான் மஸ்க் அவர்களின் ட்விட்டர் பக்கத்திற்கு சென்று, ஆமாம் சார், நாங்களும் நேற்று (29-09-2021) ஆர்சிபி மேட்ச் பார்த்தோம் என்றும், மேக்ஸ்வெல்க்காகவே ஆர்சிபி போட்டிகளை பார்த்து வருகிறோம் என கருத்துக்களை அள்ளி தூவி வருகின்றனர்.

Tesla CEO Elon Musk praise for Maxwell take Twitter by storm

ஆனால், சில விஷயம் தெரிந்த ட்விட்டர் கண்ணியவான்கள் எலான் குறிப்பிட்டது கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் அல்ல, சயின்டிஸ்ட் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் என்று பதில் அளித்து வருகின்றனர்.

என்னதான் நடக்கிறது என எலான் போட்ட ரிப்ளை ட்வீட்டை பார்த்தால், உண்மையிலேயே எலன் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ்.காம் வெளியிட்ட ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் தொடர்பான செய்திக்குத்தான் ரிப்ளை கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்