"இவரு கேப்டனா இருக்குறது, 'டீம்'லயே யாருக்கும் பிடிக்கல போல.. என்னங்க இப்டி இருக்காரு??.." விமர்சனத்தை அடுக்கித் தள்ளிய 'சேவாக்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்டார்.

"இவரு கேப்டனா இருக்குறது, 'டீம்'லயே யாருக்கும் பிடிக்கல போல.. என்னங்க இப்டி இருக்காரு??.." விமர்சனத்தை அடுக்கித் தள்ளிய 'சேவாக்'!!

இதனைத் தொடர்ந்து, இந்த சீசனுக்கு முன்பாக ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்த ராஜஸ்தான் அணி, இளம் வீரர் சஞ்சு சாம்சனை (Sanju Samson) கேப்டனாக நியமித்தது. இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் அணி, இரண்டில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. முதல் ஐபிஎல் சீசனில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் அணி, அதன் பிறகு கோப்பையை கைப்பற்றவேயில்லை.

இந்த சீசனிலும் சற்று தடுமாற்றத்துடனேயே அந்த அணி காணப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் செயல்பாடு குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் (Sehwag) சில விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 'ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு சாம்சன் கேப்டனாக இருப்பது மகிழ்ச்சியாக இல்லை என்றே நான் கருதுகிறேன். அமைதியாக இருந்த ஒரு வீரருக்கு, திடீரென கேப்டன் பதவியை அந்த அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.

இதனால், சாம்சன் இந்த பதவிக்கு பொருந்திக் கொள்ள நேரம் எடுக்கும். அணியின் கேப்டனாக இருப்பவர், தனது அணியிலுள்ள வீரர்களின் செயல்பாடுகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால், ராஜஸ்தான் அணியில் ஒரு பந்து வீச்சாளர் அதிக ரன்களைக் கொடுத்து விட்டால், அவரிடம் சாம்சன் நம்பிக்கையளிக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அணி வீரர்களை கேப்டன் தான் அதிகம் பிரஷர் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும். டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அந்த விஷயத்தை சரியாக செய்கிறார். ஆனால், சஞ்சு சாம்சன் அதனை செய்வதில்லை.

அது மட்டுமில்லாமல், அந்த அணி வீரர்களுக்குள்ளும் பேச்சுவார்த்தை தொடர்பு இல்லை என்றே தெரிகிறது. ஒவ்வொரு வீரரும் தனியாக ஆடுவது போல உள்ளது. இதனால், ஒரு அணி போன்ற உணர்வை ராஜஸ்தான் ஏற்படுத்தவில்லை' என சேவாக் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்