இலங்கையில் த்ரில் வெற்றி!.. இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியின் ஃபீலிங் என்ன?.. பிசிசிஐ வெளியிட்ட படத்தை... பங்கம் செய்த முன்னாள் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் த்ரில் வெற்றிபெற்றிருக்கும் இந்திய ஏ அணி குறித்து, இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கையில் த்ரில் வெற்றி!.. இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியின் ஃபீலிங் என்ன?.. பிசிசிஐ வெளியிட்ட படத்தை... பங்கம் செய்த முன்னாள் வீரர்!

இந்தியா - இலங்கை இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று (20.7.2021) நடைபெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை, பந்து வீச்சில் யஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளும், தீபக் சாகர் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் கைப்பற்ற, இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்திருந்தது.

276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ப்ரித்வி ஷா, இஷான் கிஷன் போன்ற அதிரடி வீரர்களை அடுத்தடுத்து இழக்க, ஷிகர் தவான் சற்று நிதானமாக ஆடியதால் 65/3 என்ற நிலைக்கு ஸ்கோர் சென்றது. அதன் பிறகு மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் சேர்த்தனர். பாண்டே ரன்னர் முனையில் பவுலர் கைப்பட்டு ரன் அவுட் ஆனார்.

சூர்யகுமார் யாதவ் மிகப்பிரமாதமாக ஆடி ரன் ரேட்டை குறைய விடாமல், 55 ரன்களை எடுத்து வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆனார். இந்திய அணி 193/7 என்ற நிலையில் தடுமாறிய போது, அட்டகாசமாக ஆடிய தீபக் சாகர் (69) மற்றும் புவனேஷ்வர் குமார் (19) அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இதற்கிடையே, இங்கிலாந்தில் உள்ள இந்திய டெஸ்ட் அணி ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களின் வெற்றியை ரசித்த புகைப்படத்தை பிசிசிஐ டிவி வெளியிட்டுள்ளது.

அதனை முன்னாள் இந்திய அணி வீரர் வாசிம் ஜாஃபர், "டீம் இந்தியா வாட்சிங் டீம் இந்தியா" என்று மீம் வெளியிட்டு ரசித்துள்ளார்.

 

 

 

 

 

மற்ற செய்திகள்