'ப்ளூவா, ஆரஞ்சு நிற ஜெர்சியா?'... 'அரையிறுதியில் காத்திருக்கும் சவால்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில், எந்த அணியுடன் மோதும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
12-வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. 10 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், 41 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், இங்கிலாந்து 3-வது அணியாகவும் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றன. 4-வது அணியாக நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதிபெற இருக்கிறது.
இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வரும் சனிக்கிழமையன்று தலா ஒரு லீக் போட்டியில் விளையாட உள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தால், அரையிறுதிக்கு தகுதி பெற 4-வது இடத்தில் அதிக வாய்ப்புள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளலாம்.
மாறாக புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் இந்திய அணி நீடிக்கும் பட்சத்தில், இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு நடந்தால், ஐசிசி விதியின்படி மீண்டும் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து விளையாட வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் சனிக்கிழமை நடைபெறும் போட்டி ரசிகர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.