இந்திய அணியை துரத்தும் ‘காயம்’.. டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய மற்றொரு ‘நட்சத்திர’ வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபேட்டிங் பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதனை அடுத்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. வரும் 7ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இடதுகை மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது காயம் குணமடைய 3 வாரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதனால் எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் கே.எல்.ராகுல் விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, சைனி உள்ளிட்ட 5 வீரர்கள் ஆஸ்திரேலிய கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளதால் அவர்கள் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்த சந்தேகங்கள் தீராத நிலையில், கே.எல்.ராகுலும் காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்