"இந்தியா டீமோட வெற்றிக்கு 'கோலி' காரணம் இல்ல.. 'இவரு' ஒருத்தரு மட்டும் தான் காரணம்.." 'முன்னாள்' வீரர் சொன்ன விஷயம்.. "என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு?!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக, நியூசிலாந்து அணியை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டிக்கான விறுவிறுப்பு, தற்போதே ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளதால், தொடர் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல், இரு அணிகளும் அதிக பலத்துடன் விளங்குவதால், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது பற்றியும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் சமீப கால ஆட்டத்தைப் பொறுத்தவரையில், கோலி தலைமையிலான அணி, அனைத்து வடிவிலான போட்டிகளிலும், இளம் வீரர்களைக் கொண்டே, எத்தகைய பலம் வாய்ந்த எதிரணியினருக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
கோலி தலைமையில், ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் (Monty Panesar), இந்திய அணியின் வெற்றிக்கான காரணம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'இந்திய அணியின் கடந்த சில மாதங்களின் போட்டிகளை எடுத்துப் பார்த்தால், அது கோலியின் அணி அல்ல, ரவி சாஸ்திரியின் அணி என்பது தெரியும். நான் ஓரளவுக்கு அப்படி தான் உணர்கிறேன். இந்திய அணியின் வீரர்களுக்கு மத்தியில், ரவி சாஸ்திரி தன்னம்பிக்கையை அதிகம் விதைத்து வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, அந்த அணியின் கேப்டன் கோலி வெளியேறிய பிறகும், இந்திய அணி வெற்றி பெற்றது என்பது ஆச்சரியமான ஒன்று.
மேலும், அந்த அணியின் முக்கியமான வீரர்களும் காயமடைந்திருந்தனர். எனினும் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு எல்லாம் காரணம், அணியின் பின்னால் இருந்து ரவி சாஸ்திரி போட்ட திட்டங்களே ஆகும்' என பனேசர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்